குலாம் நபி ஆசாத்தின் கட்சி ஜம்முவில் அதன் முக்கிய தலைவர்களை இழந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய முகமாக உள்ள மற்றும் முன்னாள் அமைச்சருமான பீர்சாதா முகமது சயீத் உள்பட 17 தலைவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தனர். ஜனநாயக ஆசாத் கட்சியின் (டிஏபி) எதிர்காலம் இப்போது ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத், சயீத், தாரா சந்த் மற்றும் பல்வான் சிங் ஆகியோரைக் குறிப்பிட்டு பேசினார். அப்போது, அவர்கள் மூவரும் எந்தத் தொகுதியிலும் இல்லை. ஆகவே இது ஒரு பின்னடைவு அல்ல. அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள். அவர்கள் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்கு எதிராக நான் எதுவும் கூறமாட்டேன் என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதில், குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து ஜம்முவில் ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சில முக்கிய தலைவர்களும் விலகியதால் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 17 தலைவர்கள் நேற்று காங்கிரஸில் இணைந்தனர்.
ஆசாத்தின் ஜனநாயக ஆசாத் கட்சி இன்னும் ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் (EC) பதிவு செய்யப்படவில்லை. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணை முதல்வராக இருந்த சந்த் கடந்த மாதம் கட்சியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து தற்போது மேலும் சிலர் வெளியேறியுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ பல்வான் சிங், முன்னாள் அமைச்சர் மனோகர் லால் சர்மா ஆகியோர் ஆசாத் கட்சியில் இருந்து விலகினர்.
தலைவர்கள் விலகுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை விரைவில் ஜம்மு காஷ்மீர் வரவுள்ளது. ஆசாத் செனாப் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது வரை பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆசாத்தின் வழியைப் பின்பற்றிய பல தலைவர்கள் ஆசாத் பா.ஜ.கவுக்கு மாற்றாக உருவெடுத்து ஜம்மு காஷ்மீரில் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வாக்குகளை மட்டுமே பிரித்து, பா.ஜ.கவின் கரங்களை பலப்படுத்துவார் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையின் வரவேற்பு, தாக்கம் இந்த தலைவர்களை பாதித்ததாகவும் தெரிகிறது. இந்த மாத இறுதியில் ஜம்மு காஷ்மீரில் நுழையவுள்ள யாத்திரை காங்கிரஸின் வெகுஜன மற்றும் அடித்தளத்தை மேம்படுத்தலாம் என்று யூனியன் பிரதேசத்தின் அரசியல் வட்டாரங்களில் ஒரு உணர்வு உள்ளது என்றும் கூறப்படுகிறது. தாய் கட்சிக்கு திரும்பிய தலைவர்களை காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
மீண்டும் காங்கிரசுக்கு திரும்பிய முக்கிய தலைவர்கள்
முன்னாள் எம்எல்சி முசாஃபர் பாரே, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம்.கே.பரத்வாஜ், முன்னாள் அமைச்சர் பூஷன் டோக்ரா, முன்னாள பட்டியல் இன ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தவர். முன்னாள் டிஏபி பொதுச் செயலாளர் நரிந்தர் சர்மா, ஆசாத் தலைமையிலான கட்சியின் சம்பா தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் விஜய் தர்கோத்ரா, கதுவா மற்றும் கத்ரா நகராட்சியின் முன்னாள் தலைவர்கள் நரேஷ் சர்மா மற்றும் அம்ப்ரிஷ் மகோத்ரா.
மனோகர் லால் ஷர்மா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில் தான் இப்போது எந்த கட்சியிலும் இணையவில்லை என்று கூறினார். கதுவாவின் பில்வார் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர் லால்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.