/tamil-ie/media/media_files/uploads/2019/03/a823.jpg)
Gir Asiatic Lion shared by PM Narendra modi - 'நான் தனிக்காட்டு ராஜா' என்று சொல்கிறாரா? வைரலாகும் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு!
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக தள விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழல் இது. தேதி அறிவிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவை கூட்டணி இறுதிப்படுத்துதல், தொகுதிகள் ஒதுக்கீடு என ஏகத்துக்கும் பிஸியாக இருக்க, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சிங்கத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
March 2019Majestic Gir Lion....Lovely picture! https://t.co/jl5zdxW9PV
— Narendra Modi (@narendramodi)
Majestic Gir Lion....Lovely picture! https://t.co/jl5zdxW9PV
— Narendra Modi (@narendramodi) March 11, 2019
குஜராத் மாநிலம் ஜுனாகத் வனப்பகுதியில் உள்ள சரணாலயத்தில் சிங்கம் ஒன்று மரத்தின் மீது கம்பீரமாக நிற்கும் புகைப்படத்தை பதிவிட்ட மோடி, 'கம்பீரமான கிர் சிங்கம், அழகான படம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட இப்புகைப்படம் தற்போது சமூக தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிலர், 'மோடியின் கலை ஆர்வத்தை ஆஹா, ஓஹோ-வென சிலாகிக்க, சிலரோ தேர்தலை மனதில் வைத்தே, 'நான் தனிக்காட்டு ராஜா' என்பதை மோடி எதிர்க் கட்சிகளுக்கு உணர்த்துகிறார் என்று அர்த்தம் போதித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.