ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் இடமாற்றம் செய்யப்பட்டு கோவா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, புதிதாக அமைக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் ஆளுநராக ராதா கிருஷ்ண மதுர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 370 வது பிரிவைத் திருத்தி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாநிலம் பிரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ஆளுநர் பதவி பலவீனமானது என்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்த அதிகாரம் இல்லை என்றும் கூறினார். “ஆளுநர் மிகவும் பலவீனமான அலுவலகத்தில் உள்ளார்... ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசவோ அல்லது வெளிப்படையாக பேசவோ அதிகாரம் இல்லாத ஒரு சாதாரண சக மனிதர்” என்று சத்யபால் மாலிக் கூறினார்.
அதே போல, லடாக் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு நியமனம் செய்யப்ப்ட்டுள்ளார்.
கிரிஷ் சந்திர முர்மு குஜராத் மாநிலத்திலிருந்து 1985 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மோடியின் முதன்மை செயலாளராகவும் இருந்தார்.
இதனிடையே, கேரளாவின் பாஜக தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் மிசோரம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.