CAG - அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி... முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது அவரின் முதன்மை செயலாளராக முர்மு பணியாற்றியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது அவரின் முதன்மை செயலாளராக முர்மு பணியாற்றியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Girish Chandra Murmu sworn in as the Comptroller and Auditor General of India

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) அதிகாரியாக பதவியாற்றி வந்தார் ராஜீவ் மெஹ்ரிஷி. அவரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து துணை நிலை ஆளுநராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிய கிரிஷ் சந்திர முர்மு இன்று பதவி ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அவர் இன்று குடியரசுத் தலைவர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisment

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். மத்திய மாநில அரசுகளின் வரவு செலவீனங்களை தணிக்கை செய்யும் அரசியல் அமைப்பு சட்ட பதவியாகும். 62 வயதாகும் முமு ஒடிசாவின் மயூர்பானி மாவட்டத்தில் உள்ள பழங்குடி சமூகத்தில் பிறந்தவர். 1985ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அவர் பணிகளை துவங்கினார்.

Advertisment
Advertisements

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது அவரின் முதன்மை செயலாளராக முர்மு பணியாற்றியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட இந்த பொறுப்பில் 65 வயது நிறைவடையும் வரை முர்மு பணிகளை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: