/indian-express-tamil/media/media_files/tYb7ZFY9fmwzCFLSfe4M.jpg)
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை சிறுவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட 16 வயது சிறுமி மரணமடைந்தார். அந்தச் சிறுவன் "தனது காதலை ஏற்குமாறு பல வாரங்களாக சிறுமியை துன்புறுத்தியதாக" போலீசார் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: 16-year-old girl dies after being ‘set on fire by boy who stalked her for weeks’ in Andhra Pradesh
இரண்டு சிறார்களும் அண்டை கிராமங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
"சிறுவன் தன் காதலை ஏற்க பல வாரங்களாக சிறுமியைப் பின்தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தான், ஆனால் அவள் அவனை நிராகரித்தாள். சிறுமி தனது பெற்றோரிடம் புகார் அளித்தார், அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு சிறுமியை அவளது பாட்டியுடன் வசிக்க அனுப்பி வைத்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் அவளை அவளது பாட்டியின் வீட்டில் சந்தித்தான்… அப்போது தீ வைத்து கொளுத்தியுள்ளான். சிறுவனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன, ஆனால் நலமாக இருக்கிறான்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் எழுந்து சென்று, தப்பியோட முயன்ற சிறுவனை பிடித்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். பலத்த தீக்காயம் அடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர உள்துறை அமைச்சர் வி.அனிதா, குடும்பத்திற்கு விரைவில் நீதி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.