Advertisment

புதுச்சேரியில் மாயமான சிறுமி கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்பு; போலீஸ் தனிப்படை அமைத்து விசாரணை

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
girl dead body

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த நாராயணன் - மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். 

இவர் கடந்த சனிக்கிழமை மதியம்  விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென மாயமானார், இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமி அவரது வீட்டின் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதி வாய்க்காலில் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் பரவியது.

இதையடுத்து அங்கு ஒன்று திரண்ட சோலை நகர் மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவல் அடிப்படையில் சம்பவத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும் போது வாய்க்காலில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா? என்று கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.

மூன்று நாட்களாக காணாமல் போன சிறுமியை ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீஸா தேடி வந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment