பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளிடத்தில் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பார் என்பதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சாட்சி.
ஆம்! உத்திர பிரதேச மாநிலத்தில் ’அக்ஷய பாத்திரம்’ திட்டத்தின் கீழ் மூன்றாவது மதிய உணவு (பில்லியன்த் மீல்) நேற்று வழங்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு, சிறுவர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.
அப்போது குழந்தைகளிடமும் உரையாடினார். அப்போது ஒரு சிறுவனிடம், “மதிய உணவு 12 மணிக்குள் பரிமாறப்பட்டிருக்க வேண்டும். பிரதமர் தாமதமாக வந்ததால், நீங்கள் சாப்பிடுவதற்கு நேரமாகிவிட்டது. அப்படித்தானே” என்றார் மோடி.
View this post on Instagram
Had a good conversation with the children. They didn’t mind the late lunch 🙂 #AkshayPatra
அந்த சிறுவன் பதிலளிப்பதற்குள், அவன் பக்கத்தில் இருந்த ஒரு சிறுமி, “நாங்கள் காலையிலேயே வீட்டில் சாப்பிட்டுவிட்டு தான் வந்தோம்” என்று கூறி மோடியை புன்னகைக்க செய்தாள்.
”குழந்தைகளுடன் நேரம் சிறப்பாகக் கழிந்தது. சாப்பிட நேரமானதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை” என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் மோடி. தற்போது வரை அதனை 2.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.