உலக அளவில் ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள்: ஒரு பகுதி சப்ளைக்கு முன்வந்த 3 நிறுவனங்கள்

ஒப்பந்தப்புள்ளிகளை அனுப்பிய இரண்டு நிறுவனங்களில் ஒன்று வெளிநாட்டு நிறுவனம், இன்னொன்ன்று உள்நாட்டு நிறுவனம். அரசாங்கம் மூன்று வாரங்களுக்கு எதிர்பார்த்ததைவிட, 3 மாதங்களுக்கு மேல் மருத்துவ ஆக்ஸிஜனை வழங்க இந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Global oxygen tenders, three firms line up for a fraction of supply, ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள், ஆக்ஸிஜன் சப்ளை, Oxygen tenders, india, world

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு எதிராக, அரசாங்கம் மொத்தம் 3,500 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை (எல்.எம்.ஓ) வழங்குவதற்காக மூன்று ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்றுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரியவந்துள்ளது.

ஒப்பந்தப்புள்ளிகளை அனுப்பிய இரண்டு நிறுவனங்களில் ஒன்று வெளிநாட்டு நிறுவனம், இன்னொன்று உள்நாட்டு நிறுவனம், அரசாங்கம் மூன்று வாரங்களுக்கு எதிர்பார்த்த நிலையில் அதைவிட மூன்று மாதங்களுக்கு மேல் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை வழங்க இந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு வெளிநாட்டு வழங்குனர்களில் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி. கிரையோஜெனிக் எக்யூப்மெண்ட் நிறுவனம் 200 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனையும், அபுதாபியைச் சேர்ந்த கல்ஃப் இண்டஸ்டிரியல் கேஸ் நிருவனம் 1,800 மெட்ரிக் டன் வழங்க முன்வந்துள்ளன. மூன்றாவது நிறுவனமான குஜராத்தைச் சேர்ந்த அல்ட்ரா ப்யூர் கேஸ் நிறுவனம் 1,500 மெட்ரிக் டன் வழங்கியுள்ளது.

ஒரு வட்டாரம் கூறுகையில், “உண்மையில், அல்ட்ரா ப்யூர் கேஸ் லிமிடெட் வழங்கும் சலுகை மட்டுமே வெற்றிகரமான ஒப்பந்தப்புள்ளி ஏனென்றால், இந்த மாதத்திலேயே 500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை வழங்க இந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

திரவ மருத்துவ ஆக்ஸிஜனை அளிக்கக்கூடிய வழங்குனர்களுக்காக (சப்ளையர்கள்) டேங்கர்கள் / கண்டெய்னர்களை அரசாங்கம் கேட்டது. “இவை இரண்டையும் கொண்டுள்ளவர்கள் மட்டுமே வழங்குனர்கள் (சப்ளையர்கள்). மற்றவர்கள் தங்களிடம் கண்டெய்னர்கள் இல்லை என்று சொன்னார்கள்” என்று வட்டாரங்கள் கூறியது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு மருத்துவமனைகளுக்கான 20-எம்டி ஐ.எஸ்.ஓ கண்டெய்னர்களில் மருத்துவ ஆக்ஸிஜன் கொள்முதல் செய்வதற்காக ஏப்ரல் 16ம் தேதி அரசாங்கம் உலகளாவிய ஒப்பந்தத்தை வழங்கியது. திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் சில வாரங்களுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அப்போது கூறியது.

விரைவான செயல்பாட்டில், ஏப்ரல் 21ம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன. இதை அறிவித்த மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், பல நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்திற்கு முன்மொழிவுகள் கிடைத்ததாக தெரிவித்தார். “நாங்கள் 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பித்தோம்… பல வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நாங்கள் விருப்பத்தைப் பெற்றுள்ளோம். அவற்றின் மதிப்பீடு நடந்து வருகிறது. நாங்கள் மிக விரைவில் ஒரு முடிவை எடுப்போம்… பொதுவாக, இந்த நிறுவனங்கள் ஆக்ஸிஜனை அனுப்ப மூன்று வாரங்கள் ஆகும்” என்று கூறினார்.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் அனைத்து முக்கிய நிறுவனங்களுடனும் பேசுகின்றன என்று ஒரு வட்டாரம் கூறியது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. உலக அளவில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல போதுமான கண்டெய்னர்கள் கிடைக்காததே உலகளாவிய நிறுவனங்களின் பதிலுக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“நாம் இறக்குமதி செய்ய வேண்டுமானால் போதுமான கண்டெய்னர்களை வாங்க வேண்டும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்படாது என்று நம்புகிறோம்” என்று அந்த வட்டாரம் கூறியது.

50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான உலகளாவிய ஒப்பந்தத்துக்கு மேல் கூடுதலாக வெளியுறவு அமைச்சகம் சுமார் 2,285 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய உதவுகிறது. இதில், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 250 மெட்ரிக் டன் வந்துள்ளது. அதே நேரத்தில் குவைத் (1,505 மெட்ரிக் டன்) மற்றும் பிரான்ஸ் (600 மெட்ரிக் டன்) ஆகிய நாடுகளிலிருந்து வழங்குதல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒரு திடீர் அதிகரிப்பைக் கண்டது. அரசாங்க தரவுகளின்படி, மே 8ம் தேதி நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50,000 கோவிட் நோயாளிகள் ஐ.சி.யுவில் இருந்தனர். 14,500க்கும் அதிகமானவர்கள் வென்டிலேட்டர் உதவியுடனும் 1.37 லட்சத்திற்கு மேலானவர்கள் ஆக்ஸிஜன் உதவியுடனும் இருந்தனர்.

50,000 மெட்ரிக் எல்எம்ஓவுக்கான உலகளாவிய டெண்டருக்கு கூடுதலாக, வெளியுறவு அமைச்சகம் சுமார் 2,285 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய உதவுகிறது. இதில், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 250 மெட்ரிக் டன் வந்துள்ளது, அதே நேரத்தில் குவைத் (1,505 மெட்ரிக்) மற்றும் பிரான்ஸ் (600 மெட்ரிக்) ஆகிய நாடுகளிலிருந்து வழங்கல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை இரண்டாவது அலைக்கு மத்தியில் கூர்மையான முன்னேற்றத்தைக் கண்டது. அரசாங்க தரவுகளின்படி, மே 8 அன்று, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50,000 கோவிட் நோயாளிகள் ஐ.சி.யுவில் இருந்தனர், 14,500 க்கும் அதிகமானவர்கள் வென்டிலேட்டர் ஆதரவிலும், 1.37 லட்சத்திற்கு மேல் ஆக்ஸிஜன் ஆதரவிலும் இருந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்று முதல் உச்சத்தின் போது, ​​ஐ.சி.யு.களில் சுமார் 23,000 நோயாளிகளும் வென்டிலேட்டர்களில் 4,000க்கும் குறைவானவர்களும், ஆக்ஸிஜன் உதவியுடன் 40,000 பேர்களும் இருந்தனர்.

மார்ச் மாதத்திலிருந்து மருத்துவ ஆக்ஸிஜன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. “முதல் அலையின் போது, ​​செப்டம்பர் 29, 2020 அன்று அதிகபட்சமாக 3,095 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் விற்பனை காணப்பட்டது. மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) விற்பனை மார்ச் 31, 2021 அன்று ஒரு நாளுக்கு 1,559 மெட்ரிக் டன்-னில் இருந்து மே 3, 2021-க்குள் 5 மடங்குக்கு மேல் ஒரு நாளுக்கு 8,000 மெட்ரிக் டன் அளவுக்கு விற்பனை உயர்ந்தது.” அரசாங்கம் மே 10ம் தேதி ஒரு அறிக்கையில் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Global oxygen tenders three firms line up for a fraction of supply

Next Story
‘தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியில் இந்தியாவின் முடிவு நியாயமானது’ – டாக்டர் அந்தோணி ஃபாசிIndia news in tamil: India’s decision to extend gap between Covishield doses is reasonable says Dr Fauci
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com