Advertisment

அமெரிக்காவில் பார்வை இழப்பு: கண் சொட்டு மருந்தை திரும்பப் பெற்ற சென்னை நிறுவனம்

கண் எரிச்சல் அல்லது வறட்சியைப் போக்கப் பயன்படுத்தபடும் இந்த மருந்து,, அமெரிக்காவில் இணையம் வழியாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது, என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
eye drops

Chennai pharma recalls eye drop after infections in US

காம்பியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 66 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியது.

Advertisment

ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் – ஆகிய நான்கு சிரப்புகளும் ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இதைப்போல கடந்த டிசம்பர் இறுதியில், நொய்டாவை தளமாகக் கொண்ட மரியன் பயோடெக் தயாரித்த Doc-1 Max என்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிரப்பை உட்கொண்டதால், சமர்கண்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம், மருந்து எதிர்ப்புத் தொற்றுடன் (drug resistant infection) தொடர்புடையதாகக் கூறப்பட்டதையடுத்து, அமெரிக்காவிலிருந்து கண் சொட்டு மருந்தை தானாக முன்வந்து திரும்பப் பெற்றுள்ளது.

இந்த கண் சொட்டு மருந்து நோய்த்தொற்று, பார்வை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழைவதால் ஏற்படும் மரணம் போன்ற 55 சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கண் சொட்டு மருந்துகளை விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஆறு மத்திய மற்றும் மாநில மருந்து ஆய்வாளர்கள் கொண்ட கூட்டுக் குழு வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்கு தெற்கே 40 கிமீ தொலைவில் உள்ள நிறுவனத்தின் ஆலைக்கு விரைந்தது.

இது ஒரு ஒப்பந்த உற்பத்தி ஆலையாகும், இது அமெரிக்க சந்தைக்கு, மற்றவை மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன. ErziCare மற்றும் Delsam Pharma ஆகிய நிறுவனங்களால் கண் சொட்டு மருந்து விநியோகிக்கப்பட்டது.

கண் எரிச்சல் அல்லது வறட்சியைப் போக்கப் பயன்படுத்தபடும் இந்த மருந்து, அமெரிக்காவில் இணையம் வழியாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது, என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் படி, சூடோமோனாஸ் ஏருகினோசா எனப்படும் பாக்டீரியாவின் மல்டி- ஸ்டேட் கிளஸ்டர், கார்பபெனெம் எனப்படும் மூன்றாம் வரிசை ஆன்டிபயாடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த பிரச்னை எழுப்பப்பட்ட பின்னர், சென்னை மருந்து நிறுவனம் தாங்களே முன்வந்து தயாரிப்பைத் திரும்பப் பெற்றது.

எவ்வாறாயினும் அறிக்கைகளுக்குப் பிறகு, இந்திய ஒழுங்குமுறை ஆணையம் உடனே ஆலையில் ஆய்வு மேற்கொண்டது.

முன்னதாக ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள நிறுவனங்களில் இதேபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், நல்ல உற்பத்தி நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, இந்த நிறுவனங்கள் மூடப்பட்டன.

உஸ்பெகிஸ்தானில், மரியன் பயோடெக் தயாரித்த இரண்டு சிரப்களை உட்கொண்ட 18 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர். காம்பியாவில், ​​கடுமையான சிறுநீரக பாதிப்பு காரணமாக 70 குழந்தைகள் இறந்தது மெய்டன் பார்மாவால் தயாரிக்கப்பட்ட நான்கு சிரப்களுடன் தொடர்புடையது. இரண்டு நிகழ்வுகளிலும், சிரப்களில் டை-எத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் அசுத்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment