New routes, discounts by Air India, Vistara, GoAir and Indigo : ஏப்ரல் 17ம் தேதி ஜெட் ஏர்வேஸ் தங்களின் சேவைகளை முற்றிலுமாக நிறுத்திவிட்ட காரணத்தால், இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தரா போன்ற நிறுவனங்கள் தற்போது புதிய மார்க்கங்களில் விமான சேவையை துவங்கியுள்ளன.
கோ ஏர் (GoAir)
மும்பை - பேங்காங்க் - மும்பை மார்க்கத்தில் தினமும் விமான சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கோ ஏர் நிறுவனம். இதே போன்று டெல்லியில் இருந்து பேங்காங்கிற்கு தினமும் விமான சேவையை அளிக்க இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளது. டெல்லியில் இருந்து பேங்காங்கிற்கான விமான சேவை ஜூலை 25ம் தேதி முதலும், மும்பையில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதியிலும் துவங்க உள்ளன. டெல்லியில் இருந்து பேங்காங்க் செல்ல ரூ. 8,499 மற்றும் மும்பையில் இருந்து ரூ. 8,199 என்ற ரீதியில் டிக்கெட்கள் விலை இருக்கும் என்றும் அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
Official website : goair.in
இண்டிகோ (IndiGo)
மும்பை மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை வழங்க உள்ளது இண்டிகோ. டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ரூ. 8,499ல் இருந்து ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல் இந்த சேவை துவங்குகிறது.
ஏர் இந்தியா (Air India)
ஏர் இந்தியா நிறுவனமும் புதிய சர்வதேச விமான சேவைகளை துவங்க உள்ளடது. இந்தூர் - துபாய் - இந்தூர், கொல்கத்தா - துபாய் - கொல்கத்தா, டெல்லி - டொராண்ட்டோ - டெல்லி என சேவைகளை துவங்க உள்ளது. டொராண்ட்டோ சேவை செப்டம்பர் 27ம் தேதி முதல் துவங்குகிறது. டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ரூ. 50,889 ஆகும்.
விஸ்தரா (Vistara)
விஸ்தரா நிறுவனமும் தங்களின் விமான சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளது. டெல்லி - சிங்கப்பூர் - டெல்லி என்ற மார்க்கத்தில் புதிய விமானங்கள் ஆகஸ்ட் 6ம் தேதி துவங்க உள்ளது. மும்பை - சிங்கப்பூர் - மும்பை மார்க்கத்தில் புதிய சேவைகளை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தர உள்ளது விஸ்தரா. கூடுதல் தகவல்களுக்கு airvistara.com இணைய தளம் செல்லவும்.
மேலும் படிக்க : இந்தியாவில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள