scorecardresearch

பிரியங்கா காந்தி வருகை… கோவா காங்கிரஸில் பெரும் எண்ணிக்கையில் ராஜினாமா

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோவாவுக்கு வருகை தரும் நாளில், கோவா தலைநகர் போர்வோரிம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் குழு வெள்ளிக்கிழமை காலை ராஜினாமா செய்தனர்.

பிரியங்கா காந்தி வருகை… கோவா காங்கிரஸில் பெரும் எண்ணிக்கையில் ராஜினாமா

கோவா தலைநகர் போர்வோரிம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் குழு வெள்ளிக்கிழமை காலை ராஜினாமா செய்தனர். சுயேச்சை எம்.எல்.ஏ ரோஹன் கவுண்டேவால் ஆதரிக்கப்படும் குழு, 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் காங்கிரஸ் தீவிரமாக இல்லை என்று கூறியது.

கோவா காங்கிரஸ் கட்சி பெரும் எண்ணிக்கையில் ராஜினாமாக்களை எதிர்கொண்டுள்ளது. கடலோர மாநிலமான கோவாவில் வரவிருக்கும் தேர்தலுக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் குழப்பம் நிலவுகிறது. ஏனென்றால், எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் தொடர்ச்சியான கூட்டங்களுக்கு தயாராகி வருகின்றன.

“வரவிருக்கும் கோவா தேர்தலில் தீவிரமாக போட்டியிட காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை. அதன் சில தலைவர்களின் அணுகுமுறையால் இது ஒரு தொடக்கநிலை அல்ல” என்று போர்வோரிமில் இருந்து குழுவை வழிநடத்திய முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் குபேஷ் நாயக் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், காங்கிரஸுக்கு மற்றொரு பின்னடைவாக, தெற்கு கோவாவைச் சேர்ந்த அதன் மூத்த தலைவர் மொரேனோ ரெபெலோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கர்டோரிம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ கட்சிக்கு எதிராக வேலை செய்த போதிலும் அலிக்சோ ரெஜினால்டோ லோரன்கோவை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்ததை அடுத்து அதிருப்தி அடைந்ததாக ரெபேலோ ராஜினாம கடிதத்தில் கூறியுள்ளார்.

“கடந்த நான்கரை ஆண்டுகளாக கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காத அலிக்சோ ரெஜினால்டோ லோரென்கோ, அதற்கு மாறாக கட்சித் தலைவர்களையும் தன்னையும் அவதூறு மட்டுமே செய்தவர், சமீபத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் கர்டோரிம் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தார். கட்சியின் செயல் தலைவராக பதவி உயர்வு பெற்று, சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது மூத்த தலைவர்களால் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்” என்று கோவா காங்கிரஸ் கமிட்டி (ஜிபிசிசி) தலைவர் கிரிஷ் சோடங்கருக்கு எழுதிய கடிதத்தில் ரெபெலோ கூறியுள்ளார்.

கர்டோரிம் தொகுதியில் அவர் கட்சிக்கு எதிராக வேலை செய்த போதிலும் அலெக்சோ ரெஜினால்டோ லோரென்கோவை வேட்பாளராக கட்சி அறிவித்ததை அடுத்து அவர் வருத்தமடைந்ததாக ரெபெலோவின் ராஜினாமா கடிதம் கூறுகிறது. ரெபேலோ கர்டோரிமைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சட்டமன்றத் தேர்தலுக்காக கோவா ஃபார்வர்ட் கட்சியுடனான புரிந்துணர்வின் தன்மை குறித்து காங்கிரஸில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு பெரும் எண்ணிக்கையில் ராஜினாமாக்கள் வந்தன.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கோவா தேர்தல் பொறுப்பாளர் ப. சிதம்பரம் வியாழக்கிழமை அன்று கோவார் ஃபார்வர்டு கட்சி காங்கிரஸுக்கு மட்டுமே ஆதரவை வழங்கியதாகவும், இந்த கட்டத்தில் அதை கூட்டணி என்று கூற மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

மறுபுறம், காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் குண்டு ராவ், கோவா ஃபார்வர்டு கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் மற்றும் சோடாங்கர் இடையே சனிக்கிழமை சந்திப்பை முன்மொழிந்துள்ளார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், “இதுவரைக்கும் ஒரு கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் டெல்லிக்கு வந்து, பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறியிருந்தார். ஆதரவை ஏற்கிறோம் என்றார் ராகுல் காந்தி. மற்ற அனைத்து விவரங்களும் மேலும் விவாதிக்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.

ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களில், தினேஷ் குண்டு ராவ், “நான் 11/12/21, காலை 10 மணிக்கு காங்கிரஸ் தேர்தல் அலுவலகமான பாட்டோ, பிளாசா, பாஞ்சிமில், கோவா ஃபார்வர்டு கட்சி தலைவர் விஜய் சர்தேசாயையும் கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் மற்றும் பலருடன் சந்திப்புக்கு அழைத்துள்ளேன்.” என்று ட்வீட்ட் செய்தார்.

பிரியங்கா காந்தி வத்ரா கோவாவிற்கு பயணம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் உரையாற்றவும், இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் உரையாடவும் திட்டமிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Goa congress hit by spate of resignations on day of priyanka gandhi visit