scorecardresearch

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ5000 எப்படி சாத்தியம்? சிதம்பரம் கேள்வி

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, கிரஹ லக்ஷ்மி என்ற திட்டத்தின் கீழ், பணவீக்கத்தை எதிர்கொள்ள உறுதியான வருமான உதவியாக ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒரு பெண்ணுக்கு மாதம் ரூ 5,000 செலுத்தப்படும் என்று சனிக்கிழமை கூறினார்.

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ5000 எப்படி சாத்தியம்? சிதம்பரம் கேள்வி

கோவாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ. 5,000 வழங்கப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது கிரஹ லக்ஷ்மி திட்டத்தை அறிவித்த ஒரு நாள் கழித்து, தேர்தல் வாக்குறுதியாக மூத்த காங்கிரஸ் தலைவரும், கோவாவின் காங்கிரஸ் கட்சியின் சிறப்புப் பார்வையாளருமான ப. சிதம்பரம் அதை விமர்சித்தார். இது சாத்தியமில்லை என்று கூறி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியான கணக்கு இங்கே உள்ளது. கோவாவில் 3.5 லட்சம் குடும்பங்களில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ.5,000 மாதாந்திர மானியமாக மாதம் ரூ.175 கோடி செலவாகும். அதாவது ஆண்டுக்கு ரூ.2,100 கோடி செலவாகும். மார்ச் 2020 இறுதியில் ரூ. 23, 473 கோடி கடன் நிலுவையில் இருந்த கோவா மாநிலத்திற்கு இது ஒரு சிறிய தொகைதான். கடவுள் கோவாவை ஆசீர்வதிப்பாராக! அல்லது கோவாவைக் கடவுல்தான் காப்பாற்ற வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், கோவா மாநிலப் பொறுப்பாளருமான மஹுவா மொய்த்ரா காங்கிரச் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்: “ஆமாம் சிதம்பரம் சார், ரூ.5000 முதல் 3.5 லட்சம் கோவா குடும்பங்கள் = ரூ. 2100 கோடி என்பது மொத்த பட்ஜெட்டில் 6-8% ஆகும். கோவிட்க்கு பிந்தைய சூழ்நிலையில் நல்ல பொருளாதாரம் கையில் பணத்தையும் பணப்புழக்கத்தையும் நிர்வாகத்தில் வைக்க வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

சிதம்பரத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்த கோவா திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கூறுகையில், “ப.சிதம்பரம்ஜி நீங்கள் தொடர்ந்து இந்த கணக்கைப் போடலாம்.அதே நேரத்தில் கோவா மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். ஏனெனில், அது காலத்தின் தேவை. கோவா விவேகமான நல்ல நிர்வாகத்திற்கு உரிய மாநிலம். யாரோ ஒருவர் அதை வழங்க வேண்டிய நேரம் இது.” என்று பதிவிட்டுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இரண்டு நாள் பயணமாக கோவாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வரவுள்ளார். கோவா மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அவரது கட்சி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்ததில் இருந்து, மம்தா பானர்ஜி கோவாவுக்கு இரண்டாவது முறையாக வருகை தருகிறார்.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியுடன் (எம்ஜிபி) தேர்தலுக்கு முன்பே கூட்டணியை அறிவித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மம்தா பானர்ஜி, திரிணாமூல் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் எம்.ஜிபி.யின் தலைவர்கள் தீபக் தவாலிகர் சுதின் தவாலிகர் என்கிற ராமகிருஷ்ணா உள்ளிட்ட தலைவர்களுடன் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் மேடையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும், கோவாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி மர்லீனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஒரு செய்தித்தாளில் வெளியாகி இருந்த செய்தியைக் குறிப்பிடு ஒரு ட்வீட்டுக்கு பதிலளித்த ஆம் ஆத்மியின் கோவா பொறுப்பாளர் அதிஷி குறிப்பிடுகையில், “திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருக்காது என்பதை நான் முழுப் பொறுப்புடன் கூறுகிறேன். எனவே, அவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை. கோவாவுக்கு நல்ல வேட்பாளர்களுடன் புதிய மாற்றத்தை வழங்கவும், நேர்மையான, ஊழலற்ற அரசாங்கத்தை அமைக்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கோவாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லை என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார். “தேர்தலுக்குப் பிறகு, தேவைப்பட்டால் பாஜகவைத் தவிர வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று கெஜ்ரிவால் கூறினார்.

கோவா அரசியலில் திரிணாமூல் காங்கிரஸின் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த கெஜ்ரிவால், “திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பே இல்லை. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன் வந்திருப்பது, நகர மக்களை அவமதிப்பது போல் உள்ளது. நீங்கள் மக்களுடன் குறைந்தது இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.” என்று கூறினார்.

கடந்த அக்டோபர் 30-ம் தேதி கோவாவுக்குச் சென்ற மம்தா பானர்ஜி, கடந்த காலங்களில் கெஜ்ரிவாலுடன் இருந்த நல்லுறவைப் பகிர்ந்துகொண்டார்: “நான் அவரை (கெஜ்ரிவால்) மதிக்கிறேன். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. டெல்லியில் அன்னா ஹசாரேவால் வெற்றி பெற்றனர். அதை நீங்கள் பாராட்ட வேண்டும்… ஒவ்வொரு முறையும் ஒரு அரசியல் கட்சி மட்டுமே வரும் என்பதல்ல. நான் அவர்களை பஞ்சாப் செல்ல விடாமல் தடுத்துள்ளேனா? எங்களை ஏன் கோவா வரவிடாமல் தடுக்கிறார்கள்? வேறு எந்தக் கட்சியையும் பற்றி நான் பேச முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு அவர்களின் சுதந்திரம், அவர்களின் சொந்த விருப்பம், அவர்களின் சொந்த அமைப்பு உள்ளது. உண்மையில் சிக்கலைச் சந்திக்கும் எனது கட்சி மற்றும் உள்ளூர் பிராந்தியக் கட்சிகளைப் பற்றி என்னால் பேச முடியும். அவர்கள் பாஜகவை எதிர்த்துப் போராட விரும்புகிறார்கள்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Goa p chidambaram criticise of tmc pre poll promise

Best of Express