வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா குறித்து நேற்று மக்களவையில் நடந்த விவாதத்தில், பாஜக பாராளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே பேசும்போது, பொருளாதாரத்துக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (ஜிடிபி) எந்த சம்பந்தமும் இல்லை, அதை ‘பைபிள், ராமாயணம் மற்றும் மகாபாரதம்’ என்று கருதக்கூடாது என கூறினார்.
Advertisment
இதற்கு பதில் அளித்து, சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் செய்துள்ள ட்வீட்டில், "மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏதும் சம்பந்தம் இல்லை, தனிப்பட்ட வரி குறைக்கப்படும், இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
GDP numbers are irrelevant, personal tax will be cut, import duties will be increased.
இவை பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய பாஜகவின் கருத்துக்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என கூறி உள்ளார்.
முன்னதாக, நேற்று மக்களவை விவாதத்தின் போது, பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்து கவலை தெரிவித்ததோடு, பிரச்சனையை சமாளிக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இப்போது தொடர்ச்சியாக ஆறாவது காலாண்டில் குறைந்துள்ளது. முந்தைய குறைந்த அளவு மார்ச் 2013 இல் 4.3 சதவீதமாக இருந்தது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
டிசம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள இந்த ஆண்டின் இறுதி நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.