விநாயகர், லட்சுமி படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என கோரிக்கை விடுத்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தாக்குதல் தொடுத்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவை தாக்குதலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி குடைச்சல் கொடுத்துவருகிறது. இந்த நிலையில், பாஜகவினர் ஆம் ஆத்மி கட்சியை இந்து விரோத கட்சி என்று கூறினார்கள்.
இந்த நிலையில் புதன்கிழமை அரவிந்த் கெஜ்ரிவாலின் கடந்த கால பேச்சுகளை கூறி இது அவரின் இந்து விரோத செயல்கள் என பாஜகவினர் பரப்புரை மேற்கொண்டனர்.
குறிப்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா, அரவிந்த் கெஜ்ரிவாலின் கடந்த கால பேச்சுகளை பட்டியலிட்டார். மறுபுறம், பாஜக மூத்தத் தலைவர் ஷாநவாஸ் ஹுசைன், கெஜ்ரிவால் "மகாத்மா காந்தியை" ஓரங்கட்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்,
மேலும், ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி அர்பன் நக்ஷல், இந்து விரோதம் உள்ளிட்ட பெயர்களை அகற்ற விரும்புகிறது.
இதற்கிடையில் டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி இந்து விரோத கட்சி என்ற முத்திரையை பாஜக குத்தியது. தொடர்ந்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, விநாயகர், லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் நாட்டுக்கும் நரேந்திர மோடிக்கும் உள்ளது.
கடந்த காலங்களில் பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது” என்றார்.
தொடர்ந்து குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா பேசிய பழைய வீடியோக்களை வெளியிட்டார்.
இதற்கிடையில், தேசியவாதமாக இருந்தாலும் சரி இந்துத்துவாவாக இருந்தாலும் சரி, கெஜ்ரிவால் ஒரு தேசிய பாத்திரத்திற்காக தனது சித்தாந்த வேடத்தை மாற்றிக்கொண்டு வேகமாக மாற்றியமைக்கிறார் என்பதை பாஜக வட்டாரங்கள் ஒப்புக்கொண்டன.
மறுபுறம் பாஜக தேர்தல் நேரத்தில் இலவச கலாசாரத்தை தாக்கிவருகிறது. இந்த நிலையில் குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதுபோன்ற நடவடிக்கைகளால் குஜராத் மற்றும் இமாச்சலத்தில் கெஜ்ரிவால் எந்த ஆதாயமும் அடைய வாய்ப்பில்லை என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “வரும் தேர்தலில் இழப்பதற்கு எதுவுமே இல்லாத கட்சி ஆம் ஆத்மி. அக்கட்சிக்கு எதுவும் லாபமாக இருக்கும். ஆனால் கெஜ்ரிவால் செய்ய முயற்சிப்பது தன்னைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்பதே” என்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil