கேரளாவின் பரபரப்பான தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், ஆளும் சிபிஎம் கட்சியின் மூன்று தலைவர்கள் மீது பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு மலையாள தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், பினராயி விஜயனின் முதல் முறை அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த மூன்று தலைவர்களும் தன்னிடம் பாலியல் ரீதியாக உதவி கேட்டதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.
சமீபத்தில், “துரோகத்தின் பத்மவ்யா” என்ற புத்தகத்தை வெளியிட்ட ஸ்வப்னா, “முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் ஒரு விழாவின் போது கொச்சி ஹோட்டல் அறைக்கு தன்னை அழைத்ததாகவும், மற்றொரு முன்னாள் அமைச்சர் தன்னை மலைப்பிரதேசமான மூணாறுக்கு அழைத்தார்” என்றும் கூறினார்.
மேலும், “மூன்றாவது சிபிஎம் தலைவர் அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வர வேண்டும் என்று விரும்பினார்” எனக் கூறினார். இக்குற்றச்சாட்டுகளுக்கு சிபிஎம் அல்லது மூன்று தலைவர்களும் பதிலளிக்கவில்லை.
2013 ஆம் ஆண்டு சோலார் ஊழல் சந்தேக நபரால் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது எழுப்பப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்திக் கொண்டது.
இதற்கிடையில் ஸ்வப்னா, முதலமைச்சர் பினராய் விஜயனின் அமைச்சரவையில் முதன்மை செயலாளராக இருந்த எம். சிவசங்கர் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எம். சிவசங்கர் தன்னை சென்னையில் வைத்து திருமணம் செய்துகொண்டார் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஸ்வப்னா சுரேஷிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே. சுதாகரன், “பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்றார்.
மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா மூத்தத் தலைவருமான வி. முரளிதரன், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது ஸ்வப்னா சுரேஷ் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்களையும் வைத்துள்ளார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.