ஆபாச தளங்களுக்கு அடுத்த செக்! கூகுள், ஃபேஸ்புக் அதிரடி

இது சட்டத்திற்கு எதிரான செயல் போன்ற எச்சரிக்கை வாசகமே அதில் இடம் பெற்றிருக்கும்

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ ஆகிய நிறுவனங்கள் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான குறிச்சொற்களை (Keywords) தங்களது தளங்களில் இருந்து பிளாக் செய்துள்ளன. பாலியல் தொடர்பான வீடியோக்களை குழந்தைகள் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த கீவேர்ட்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் இந்த நடிவடிக்கை குறித்து பொது மக்களின் கவனத்திற்கு பெரிதளவில் கொண்டுச் செல்லப்படவில்லை. நெட்வொர்க்கிங் குறித்து விவரம் அறிந்தவர்களுக்கு இந்த தகவல் தெரியக் கூடாது என்பதனால் சற்று ரகசியமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட கீவேர்ட்ஸில் ஏதேனும் ஒன்றை டைப் செய்தால், அது பற்றிய எந்த தகவலும் கூகுளில் கிடைக்காது. மாறாக, இது சட்டத்திற்கு எதிரான செயல் போன்ற எச்சரிக்கை வாசகமே அதில் இடம் பெற்றிருக்கும். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இன்னும் பிற மொழிகளில் உள்ள கீவேர்ட்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த தடை குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் பின்பற்றவில்லை. இதன் பிறகு, ஹைதராபாத்தைச் சேர்ந்த NGO பிரஜ்வாலா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு தாக்கல் செய்து, மேற்சொன்ன நிறுவனங்கள் அனைத்தும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

“இணையதள நிறுவனங்கள் குறிச்சொற்களை தடை செய்துவிட்டன, இருப்பினும் இன்னும் முழுமையாக பயன் கிடைக்கவில்லை. சில கீ வேர்ட்ஸ் வேலை செய்கிறது. சில, தடை செய்யப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 100 கீ வேர்ட்ஸ்களை நாங்கள் பரிசோதித்து பார்த்துவிட்டோம்” என்று பிரஜ்வாலாவின் வழக்கறிஞர் அபர்ணா பட் தெரிவித்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் இருந்து 827 ஆபாச தளங்களை மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close