ஆதார் உதவி மைய எண் குறித்து கூகுளின் மன்னிப்பு கடிதம்

தெரியாமல் நடந்த தவறு என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் விளக்கம்

UIDAI உதவி மைய எண் ஆண்ட்ராய்ட் போன்களில் டீஃபால்ட்டாக இணைத்தது குறித்து நேற்று UIDAI அமைப்பின் மீதும் ஆதார் அட்டையின் நம்பிக்கை குறித்தும்  கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.

பிரெஞ்ச் நாட்டு ஹேக்கர் எலியட் ஆதாரின் உதவி மைய எண் குறித்து ட்விட்டரில் கேள்வி கேட்க பரப்பாக மாறியது UIDAI உதவி மைய எண் விவகாரம்.

அது தொடர்பான முழு கட்டுரையையும் படிக்க

UIDAI உதவி மைய எண் தற்போது வெளிவரும் அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் டிஃபால்ட்டாக இணைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தான் எலியட்டும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் ஆதார் அமைப்பு, ” நாங்கள் எந்த ஒரு நெட்வொர்க் புரோவைடர்களிடமோ, அல்லது திறன்பேசி தயாரிக்கும் நிறுவனத்திடமோ ஆதார் உதவி மைய எண்ணை இணைப்பது குறித்து பேசவில்லை” என்று ட்விட்டரில் பதில் கூறியது.

UIDAI உதவி மைய எண் விவகாரமும் – கூகுளின் மன்னிப்புக் கடிதமும்

அதன்பின்னர், கூகுள் நிறுவனம் தானாக முன்வந்து, 2014ம் ஆண்டு இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராட்ய்ட் செட்டப் விசார்ட்டில் தாங்கள் தான் UIDAI – யின் உதவி மைய எண்ணை இணைத்தோம் என்று ஒப்புக் கொண்டது.

மேலும் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது கூகுள்.

அதில் “இது தவறுதலாக நடந்த ஒன்று. அதற்காக வருந்துகிறோம். மேலும் மிக விரைவில் புதிய விசார்ட் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதில் இந்த பிரச்சனை வராது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் “தனி நபர் குறித்த ரகசியங்களை இது எண் கொண்டு திருடிவிட இயலாது” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம்.

ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த ஆதார் உதவி எண் வருவதற்கு இது தான் காரணம் என்று கண்டறியப்பட்டாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களிலும் UIDAI – உதவி எண் எப்படி வருகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஆனால் ஏதேனும் ஒரு புள்ளியில் ஜிமெயிலை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது என்று கூகுள் குறிப்பிட்டிருக்கிறது.

UIDAI உதவி மைய எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி என இரண்டையும் 2014ல் கூகுள் இணைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் குறித்து எழும் தொடர் சர்ச்சைகள்

ஆதார் அட்டையின் நம்பத்தன்மை குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் மக்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

மிக சமீபத்தில் ட்ராய் அமைப்பின் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் அட்டை எண்ணை ட்விட்டரில் பதிவிட்டார்.

ஹேக்கர்கள் மிகவும் அசால்ட்டாக அந்த எண்ணை பயன்படுத்தி சர்மாவின் பிறந்த தேதி, முகவரி, அலைபேசி எண் உட்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டு ஆதாரின் நம்பகத் தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கினார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close