Gotabaya Rajapaksa meeting with S Jaishankar : தேசிய ஒற்றுமைக்காக தமிழ் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சம உரிமை, நீதி, அமைதி, மற்றும் மரியாதையான வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை அரசு செயல்பட வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Advertisment
இலங்கை அதிபராக கோத்தபய தேர்வு செய்யப்பட்டவுடன் கொழும்புவில் செவ்வாய் கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபருடன் ஆலோசனையில் இது தொடர்பாக ஈடுபட்டார். இலங்கை அரசு மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் கோத்தபயவிடம் சென்று சேர்க்கப்பட்டுவிட்டது.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் “இருநாடுகளுக்கும் இடையேயான உறவு முறைகள் குறித்தும், வருகின்ற காலத்தில் அதனை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்தியாவின் அனைத்துவிதமான எதிர்பார்ப்புகளையும் ராஜபக்சவிடம் அறிவித்தாகிவிட்டது. இலங்கை அரசு தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் தமிழர்களுக்கான சம உரிமை, நீதி, அமைதி ஆகியவை நிலைநாட்டப்பட வேண்டும்.” என்று ஆலோசனையில் பேசப்பட்டதாக அறிவித்தார்.
Advertisment
Advertisements
இந்தியாவின் முதல் தீயணைப்புத்துறை வீராங்கனை குறித்த வீடியோ
இதற்கு ராஜபக்ச “இன, மத, மொழி பேதமின்றி அனைத்து இலங்கை மக்களுக்குமான ஒரு அதிபராக செயல்படுவேன். எனக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்களின் நலனையும் நான் கருத்தில் கொண்டு தான் செயல்படுவேன்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு செயல்படுவேன். இந்தியாவை சிறந்த நண்பனாக எப்போதும் நினைத்து செயல்படுவேன்” என்று பதில் அளித்ததாகவும் அவர் அறிவித்தார்.
சீனாவுடன் நல்ல நட்பினை இலங்கை மேற்கொள்வதை கருத்தில் கொண்டு இந்தியா விரைவாக செயல்படுகிறது என்று வைக்கப்பட்ட கருத்தை முற்றிலுமாக மறுத்துவிட்டார் செய்தி தொடர்பாளர். இலங்கையுடனான நம்முடைய நட்புறவு என்பது பன்முகத்தன்மை கொண்டது. நம்முடைய நாட்டிற்கு மிகவும் அருகில் இருப்பதால் நாம் வரலாற்று பூர்வமாகவும் இணைந்திருக்கின்றோம் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறும்கையில் “தமிழ் மக்களுக்கான அனைத்து ஜனநாயக நீதிகளையும் அதிபர் மதிக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் உணர்வுகளை மதித்து நடப்பார் என்று எதிர்பார்க்கின்றேன். அதன் பின்பு தான் ஒற்றுமையையும், இந்நாட்டில் அனைத்து மக்களும் சமம் என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்ள இயலும். அனைவரும் இந்நாட்டின் மக்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டால் தான் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் / வளர்ச்சிகள் அனைத்து மக்களையும் வளப்படுத்தும் என்றும் அவர் அறிவித்தார்.