பொது முடக்கத்தில் உதவிய இந்தியாவின் டாப் 10 எம்.பி-க்கள்: தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு இடம்

தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த சென்னை தெற்கு தொகுதி எம்.பி டாக்டர் டி. சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

GovernEye surway results, most helpful Lok Sabha MPs, helpful MPs During COVID lockdown, கவர்ன் ஐ சர்வே, பொதுமுடக்கத்தில் உதவிய எம்.பி.க்கள், தமிழச்சி தங்கபாண்டியன், திமுக, ராகுல் காந்தி, காங்கிரஸ், அனில் ஃபிரோஜியா, பாஜக, coronavirus, covid 19 lockdown, sumathi dmk mp, dmk mp thamizhachi thangapandiyan, rahul gandhi, bjp mp anil firojia, congress, dmk, பொதுமுடக்கம்

கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு அதிகம் உதவிய மக்களவை எம்.பி.க்களைக் கண்டறியும் சர்வே நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு பொதுமக்களின் நலன் சார்ந்து செயல்படும் கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் நிறுவனம், வருங்காலத்தில் ஒரு தொற்று நோய் போன்ற எதிர்பாராத நெருக்கடியில் பொதுமுடக்கம் தேவைப்பட்டால நாம் எப்படி அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதைக் கண்டறிய முயற்சி செய்துள்ளது. அதற்கான இலக்கை அடைய, கோவிட் பொதுமுடக்கத்தின்போது மிகவும் உதவிகரமாக இருந்த மக்களவை எம்.பி.க்களைக் கண்டுபிடிக்க 2020 அக்டோபர் 1ம் தேதி ஒரு சர்வேவைத் தொடங்கியது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகளை கவர்ன் ஐ தனது http://www.governeye.co.in/survey/result வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 1, 2020 மற்றும் அக்டோபர் 15, 2020க்கு இடையில் 512 மக்களவை எம்.பி.க்களுக்காக மொத்தம் 33,82,560 பரிந்துரைகள் பெறப்பட்டன. பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சிறந்த 25 எம்.பி.க்கள் கள நேர்காணல் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் (மக்களவை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவை) அகர வரிசைப்படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

1. மௌலானா பத்ருதீன் அஜ்மல் – துப்ரி, அசாம் (யுஐடிஎஃப்),

2. சுக்பீர் சிங் பாதல் – ஃபெரோஸ்பூர், பஞ்சாப் (எஸ்ஏடி),

3. ஓம் பிர்லா – கோட்டா, ராஜஸ்தான் (பாஜக),

4. வினோத் சவ்தா – கச், குஜராத் (பாஜக)

5.கார்த்தி சிதம்பரம் – சிவகங்கை தமிழ்நாடு (காங்கிரஸ்)

6. டாக்டர் டி.சுமதி (எ) தமிசாச்சி தங்கபாண்டியன் – சென்னை தெற்கு, தமிழ்நாடு (திமுக),

7. அனில் ஃபிரோஜியா – உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம் (பாஜக),

8. நிதின் ஜெய்ராம் கட்கரி – நாக்பூர், மகாராஷ்டிரா (பாஜக),

9. ராகுல் காந்தி – வயநாடு, கேரளா (காங்கிரஸ்),

10. ஹேமந்த் துக்காரம் கோட்சே – நாசிக், மகாராஷ்டிரா (சிவசேனா),

11. விஜய் குமார் ஹன்ஸ்டாக் – ராஜ்மஹால், ஜார்க்கண்ட் (ஜே.எம்.எம்),

12.சவுத்ரி மெஹபூப் அலி கைசர் – ககாரியா, பீகார் (எல்.ஜே.எஸ்.பி)

13. அப்துல் காலிக் – பார்பேடா, அஸ்ஸாம் (காங்கிரஸ்)

14. விஜய் குமார் – கயா, பிகார் ( ஜே.டி.யு),

15. மோகன்பாய் கல்யாண்ஜி குண்டாரியா – ராஜ்கோட், குஜராத் (பாஜக)

16. சங்கர் லால்வாணி – இந்தூர், மத்தியப் பிரதேசம் ( பாஜக)

17. சதாசிவ கிசன் லோகண்டே – ஷீரடி, மகாராஷ்டிரா (சிவசேனா)

18. மஹுவா மொய்த்ரா – கிருஷ்ணாநகர், மேற்கு வங்கம் (திரிணாமூல் காங்கிரஸ்),

19. மாலூக் நாகர் – பிஜ்னோர், உத்தரபிரதேசம் (பகுஜன் சமாஜ் கட்சி),

20. ரவி சங்கர் பிரசாத் – பாட்னா சாஹிப், பீகார் (பாஜக)
21. அதலா பிரபாகர ரெட்டி – நெல்லூர், ஆந்திரப் பிரதேசம் (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி),

22. சையத் இம்தியாஸ் ஜலீல் – அவுரங்காபாத், மகாராஷ்டிரா (ஏ.ஐ.எம்.ஐ.எம்)

23. எல்.எஸ். தேஜஸ்வி – பெங்களூரு தெற்கு, கர்நாடகா (பாஜக),

24. டாக்டர் சஷி தரூர் – திருவனந்தபுரம், கேரளா (காங்கிரஸ்),

25. அகிலேஷ் யாதவ் – அசாம்கர், உத்தரபிரதேசம் (சமாஜ்வாடி கட்சி)

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 25 எம்.பி.க்களின் தொகுதிகளில் கள நேர்காணல்கள் செய்த பிறகு, முதல் 10 எம்.பி.க்களின் பட்டியலில் அனில் ஃபிரோஜியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரைய்டுத்து, அதலா பிரபாகர ரெட்டி இரண்டாவது இடத்தையும் ராகுல் காந்தி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மஹுவா மொய்த்ரா 4வது இடத்தையும் எல்.எஸ்.தேஜஸ்வி சூர்யா 5வது இடத்தையும் ஹேமந்த் துக்காரம் கோட்சே 6வது இடத்தையும் சுக்பீர் சிங் பாதல் 7வது இடத்தையும் சங்கர் லால்வானி 8வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த சென்னை தெற்கு தொகுதி எம்.பி டாக்டர் டி. சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். நிதின் ஜெய்ராம் கட்கரி 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த சர்வே பற்றியும் தரவரிசை மற்றும் சர்வேமுறை பற்றியும் கூடுதல் விவரங்களை கவர்ன் ஐ இணையதளத்தில் காணலாம்.

கவர்ன் ஐ சிஸ்டம் நடத்திய சர்வே முடிவுகளைப் பற்றி பேசிய ஆய்வுக் குழுவின் மூத்த திட்டத் தலைவர் மஞ்சுநாத் கெரி, “இந்த முடிவுகள் எம்.பி.க்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற செய்திளை வெளிப்படுத்தவில்லை. எங்கள் குழுவினர் பல்வேறு தொகுதிகளில் உள்ள மக்களுடன் நடத்திய உரையாடலின் போது கேள்விகள் கேட்கப்பட்டது. நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் எதிர்மறையான விளம்பரங்களைப் பெற சில எம்.பி.க்கள் மற்றும் அவர்களது குழுக்கள் தங்கள் தொகுதிக்கு சேவை செய்வதற்காக அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை எவ்வாறு பணயம் வைத்தார்கள் எனபடஹி நாங்கள் கேட்கவில்லை.” என்று கூறினார்.

அடுத்த பல வாரங்களில், எதிர்காலத்தில் இதேபோன்ற நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா எவ்வாறு சிறப்பாக தயாராக இருக்க வேண்டும் என்பதை இவர்களிடமிருந்து அறிய பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சுருக்கமான நேர்காணல்களை நடத்த கவர்னர் ஐ விரும்புகிறது என்று தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Governeye announced results of survey most helpful lok sabha mps during covid lockdown

Next Story
சி.பி.ஐயை திணறடித்த அபயா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!Abhaya murder case: Priest, nun sentenced to life imprisonment by CBI court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com