Advertisment

புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊழல் கண்காணிப்பு ஆணையர்... கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ்!

ஏற்கனவே பிரதமராலும் உள்துறை அமைச்சராலும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை நியமிக்கும் ஒரு குழுவாக எப்படி உயர்மட்டக் குழு செயல்படும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
adhir ranjan chowdhury, Government elected Sanjay Kothari as CVC,

 Manoj C G

Advertisment

Government elected Sanjay Kothari as CVC :  செவ்வாய் கிழமையன்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் மத்திய தகவல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டிருப்பது  சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அரசு சஞ்சய் கோத்தாரியை புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும், பிமால் ஜூல்கா அடுத்த ஆணையராகவும் பொறுப்பு வகிப்பார்கள் என்று முடிவு செய்துள்ளது. உயர்மட்ட அதிகாரிகள் தேர்வு கமிட்டியில் இடம் பெற்றிருக்கும் எதிர்கட்சி உறுப்பினர் அதிர் ராஜன் சௌத்ரி இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் இந்த கமிட்டி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா, பிரதமர் அலுவலக விவாகார இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், கேபினட் செயலாளர் ராஜுவ் கௌபா, மற்றும் பெர்சனல் அண்ட் ட்ரெய்னிங் துறை செயலாளர் சந்திரமௌலி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்த கமிட்டி அனிதா பண்டோவேவை தகவல் ஆணையராக நியமித்துள்ளனர். கோத்தாரி இதற்கு முன்பு பெர்சனல் மற்றும் ட்ரெய்னிங் துறையின் செயலாளாரக பணியாற்றி வந்தார். தற்போது அவர் குடியரசுத் தலைவரின் செயலாளராக உள்ளார். அதே போன்று ஜூல்கா தகவல் மற்றும் ஒளிப்பரப்பு ஆணையராக இருந்தார். தற்போது தகவல் ஆணையராக பதவி வகித்து வருகிறார்.

இது தொடர்பான முழுமையான தகவல்களை ஆங்கிலத்தில் படிக்க

சௌத்ரி “பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை, சர்ச் கமிட்டியின் (தேடல் குழுவின்) வெளிப்படையான அபாயகரங்களையே நமக்கு எடுத்துரைக்கிறது” என்றார். சர்ச் கமிட்டியின் (search committee) உறுப்பினராக இருக்கும், நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், தன்னுடைய பெயரையும் சி.வி.சி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த கமிட்டியில் இருக்கும் நபரே இப்படி தன்னுடைய பெயரை பரிந்துரைப்பதை சௌத்ரி எதிர்த்துள்ளார். தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிக்கும் வழியில் புதிய சர்ச் கமிட்டி உருவாக்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பதவிகளுக்கான சரியான நபரை கண்டறிய முதலில் இருந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்ச் கமிட்டியில் ராஜீவ் குமாரை தவித்து கௌபா மற்றும் சந்திரமௌலி இடம் பெற்றுள்ளனர். சி.வி.சி மற்றும் தகவல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக முன்கூட்டியே எந்த ஒரு தகவல்களையும் வழங்காமல் மத்திய அரசு வெறும் ஃபார்மாலிட்டிக்காக செயல்பட்டுள்ளது.  முறையான காரணங்களுடனும் முடிவுகளுடனும் தேடல் குழு தேர்வு செய்யப்பட்ட, பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்கள் இல்லை. ஏற்கனவே பிரதமராலும் உள்துறை அமைச்சராலும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை நியமிக்கும் ஒரு குழுவாக எப்படி உயர்மட்டக் குழு செயல்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது “ நான் இந்த தேர்வு முறையில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டினேன். தற்போது இங்கு விவாதம் நடத்துவது தேவையற்றது. ஆனாலும் நான் என்னுடைய மாற்றுக் கருத்தினை முன்வைத்துவிட்டு வந்தேன். பிரதமர் மோடிக்கும் என்னுடைய எதிர்ப்பு தெரியும். ஆனாலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வெளியானது. இனி அங்கே விவாதம் செய்வது தேவையற்றது. ஏன் என்றால் அவர்கள் அங்கு மெஜாரிட்டி என்று கூறினார்.

சுதிர் பார்கவா பதவி நிறைவுற்ற பின்பில் இருந்து 1 மாதமாக தகவல் ஆணையர் பதவிக்கான இடம் காலியாகவே இருந்தது. அதே போன்று கே.வி. சௌத்ரியின் பதவி நிறைவுற்றதில் இருந்து ஜூன் 2019ல் இருந்தே ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கான இடம் காலியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சி தலைவர்கள் சி.வி.சி. நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிப்பது இது ஒன்றும் முதல்முறையில்லை. அன்றைய டெலிகாம் செயலாளாரக இருந்த ஜே. தாமஸினை, எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், சி.வி.சியாக அறிவித்தது காங்கிரஸ். பின்னர் உச்ச நீதிமன்றத்தை அடைந்த இந்த விவகாரத்தில், எதிர்கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. மோடியின் முதல் ஆட்சியின் போது உயர்மட்ட தேர்வுக்குழுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே இருந்தார். டெல்லி காவல் ஆணையராக இருந்த அலோக் வெர்மாவை சி.பி.ஐ தலைவராக நியமித்ததற்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment