இந்திய மக்கள் தங்களை கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகளை பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கையில் மோடி அரசாங்கம் ஒரு நீல நிற டிக்கிற்காக போராடுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசை விமர்சித்தார்.
துணை ஜனாதிபதி எம்.வெங்கய்ய நாயுடு மற்றும் மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் உயர்மட்ட செயற்பாட்டாளர்களின் தனிப்பட்ட கணக்குகளிலிருந்து ‘ப்ளூ டிக்’ பேட்ஜை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் அவர்கள் கோபமடைந்ததை அடுத்து ட்விட்டர் நிறுவனம் மீண்டும் அந்த பேட்ஜை வழங்கியது. இதுவே ராகுல் காந்தியின் தற்போதைய விமர்சனத்திற்கு காரணம்.
ட்விட்டர் விதிகளின்படி, நீல பேட்ஜ் மற்றும் சரிபார்க்கப்பட்ட நிலை ஆறு மாதங்களுக்கு முழுமையடையாது அல்லது செயலற்றதாக இருந்தால் தானாகவே கணக்கிலிருந்து அகற்றப்படும்.
"மோடி அரசாங்கம் நீல நிற டிக்கிற்காக போராடுகிறது. எனவே நீங்கள் ஒரு கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பினால், நீங்கள் உங்களையே நம்பி இருங்கள், ”என்று ராகுல் காந்தி இந்தியில் ஒரு ட்வீட்டில்“ # முன்னுரிமைகள் ”என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கூறினார்.
ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ட்விட்டரில் அரசியல் செய்வது ராகுல் காந்தியின் வேலை. இவ்வளவு பெரிய தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், ஏழைகளுக்கு இலவச ரேஷனை வழங்குவதிலும் மோடி அரசு பாராட்டத்தக்க ஒரு வேலையைச் செய்துள்ளது என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், டெல்லி அரசு மருத்துவமனை செவிலியர்களிடம் மலையாளத்தில் உரையாட வேண்டாம் என்று கேட்டது. அதற்கு மொழி பாகுபாட்டை நிறுத்துவது குறித்து ராகுல் காந்தி பேசினார். தற்போது மருத்துவமனை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
“மலையாளம் இந்தியர்களுக்கு மற்ற இந்திய மொழிகளை போன்றதுதான். எனவே மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள், ”என்றார்.
கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அங்கு பணியாற்றும் நர்சிங் பணியாளர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தகவல்தொடர்புக்கு பயன்படுத்துமாறும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார்.
“இந்த உத்தரவு நம் நாட்டின் அடிப்படை மதிப்புகளை மீறுவதாகும். இது இனவெறி, பாகுபாடு மற்றும் முற்றிலும் தவறானது, ”என்று பிரியங்கா மலையாளத்தில் ஒரு ட்வீட்டில் போட்டிருந்தார். மேலும் மக்களைக் காப்பாற்றுவதற்காக கொரோனா காலங்களில் மலையாள செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர் என்றும் கூறினார்.
“இந்த உத்தரவு ஒரு அவமானம். நன்றியுணர்வு மற்றும் மரியாதைக்குரிய கடனை நாம் அவர்களுக்கு(மலையாளிகளுக்கு) கடமைப்பட்டுள்ளோம். உத்தரவை விரைவில் திரும்பப் பெற வேண்டும், மன்னிப்பு வெளியிட வேண்டும், ”என்று பிரியங்கா கோரினார்.
மற்றொரு ட்வீட்டில், மோடி அரசு ஆக்சிஜன் படுக்கைகளை 36 சதவீதமும், ஐ.சி.யூ படுக்கைகளை 46 சதவீதமும், வென்டிலேட்டர் படுக்கைகளை 28 சதவீதமும் செப்டம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான காலகட்டத்தில் குறைத்துள்ளதாக பிரியங்கா குற்றம் சாட்டினார்.
"மத்திய விஸ்டா திட்டத்தை விட இந்திய குடிமக்களின் ஆரோக்கியம் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததா," என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த திட்டத்தை அரசாங்கம் ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவித்து 2023 க்குள் அதை முடிக்க இரவும் பகலும் மக்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
"நாட்டின் ஒவ்வொரு நிபுணரும், சுகாதாரத்திற்கான பாராளுமன்றக் குழுவும் அவற்றின் சொந்த செரோ-கணக்கெடுப்புகளும் தவிர்க்க முடியாத இரண்டாவது அலைக்கு கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் என்று எச்சரித்தன," என்று பிரியங்கா தனது "ஜிம்மதர்கவுன்" (யார் பொறுப்பு) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.