Advertisment

143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்

Government flags gaps in Rahul Gandhi’s SPG detail: சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) வகுத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு நெறிமுறை விவரங்களை ஆராய்ந்த அரசாங்கம் கவலையளிக்கும்படியான இடைவெளிகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Government flags gaps in Rahul Gandhi’s SPG detail, Special Protection Group, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராகுல் காந்தி எஸ்பிஜி பாதுகாப்பில் இடைவெளி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, Congress leader Rahul Gandhi, Congress, SPG detail, India, Congress president Sonia Gandhi, Priyanka Gandhi, Modi

Government flags gaps in Rahul Gandhi’s SPG detail, Special Protection Group, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராகுல் காந்தி எஸ்பிஜி பாதுகாப்பில் இடைவெளி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, Congress leader Rahul Gandhi, Congress, SPG detail, India, Congress president Sonia Gandhi, Priyanka Gandhi, Modi

Government flags gaps in Rahul Gandhi’s SPG detail: சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) வகுத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு நெறிமுறை விவரங்களை ஆராய்ந்த அரசாங்கம் கவலையளிக்கும்படியான இடைவெளிகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.

Advertisment

அவரது பயணத்தை ஆராய்ந்த அரசாங்க அதிகாரிகள், 2015 ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி டெல்லியில் 1,892 முறை (மே 2019 வரை) குண்டு துளைக்காத வாகனத்தில் பயணம் செய்யவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர். இது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நடந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் 247 முறை(ஜூன் 2019 சேர்க்கப்பட்டுள்ளது). ராகுல் காந்தி டெல்லியில் இருந்து பயணம் செய்யும் போது குண்டு துளைக்காத வாகனத்தைத் தவிர்க்க தேர்வு செய்தார். 2005 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடையே ராகுல் காந்தி குண்டு துளைக்காத வாகனத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 முறை பயணம் செய்துள்ளார்.

சிறப்பு பாதுகாப்பு குழுவை வெளிநாடுகளில் பயன்படுத்த ராகுல் காந்தி தயக்கம் காட்டியுள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன. எஸ்பிஜி அட்டையை வெளிநாடுகளில் பயன்படுத்த காந்தியும் தயக்கம் காட்டியுள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் காந்தி 1991 முதல் 156 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் அவர் 143 வெளிநாட்டு பயணங்களில் அவர் தன்னுடன் சிறப்பு பாதுக்கப்பு குழுவை பயன்படுத்தவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சில அதிகாரிகள் இதை நெறிமுறையை கடைப்பிடிக்காதது என்று சிவப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தாலும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (எஸ்.பி.ஜி) சட்டத்தின் கீழ் சிறப்பு பாதுகாப்புக் குழுவை வெளிநாடுகளுக்கு கட்டாயம் அழைத்துச் செல்லவேண்டும் என்றுஎந்த விதிகளும் இல்லை என்று கூறுகின்றனர்.

“இந்த சட்டத்தின் கீழ், பாதுகாவலர் எல்லா நேரத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும். அது அங்கே அமைதியாக இருக்கிறது. எனவே இது வெளிநாட்டு வருகைகளுக்கும் பொருந்தும் என்று கருத வேண்டும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஒரு பாதுகாவலரை எப்போதுமே பாதுகாக்க வேண்டும் என்றாலும், அனைத்து எஸ்.பி.ஜி பாதுகாவலர்களுக்கும் சில மரியாதைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டு பிரமுகர்களைப் பாதுகாப்பதற்காக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதிமுறைகளும் விதிகளும் உள்ளன.

எடுத்துக்காட்டாக, அதிகாரிகள், பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியில் சேருவதற்காக தங்கள் குழந்தையை செல்லும்போது அவர்களுடன் பாதுகாப்பு வீரர்ளின் பாதுகாப்பை விரும்பாத நேரங்களும் உள்ளன.

“ஒரு பெரிய பாதுகாப்பு பரிவாரங்களுடன் ஒரு கல்வி நிறுவனத்திற்குள் செல்வது வெட்கக்கேடானது. வெளிநாட்டிலும் சில சூழ்நிலைகளில் பாதுகாவலரின் தனியுரிமை மதிக்கப்படுகிறது. பல நாடுகள் ஆயுதங்களை தங்கள் நாட்டிற்குள் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. இதுபோன்ற எல்லா சூழ்நிலைகளிலும், முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆயுதங்கள் இல்லாமல் பாதுகாப்பிற்கான பயிற்சிகளும் உள்ளன” என்று ஒரு இந்த அதிகாரி கூறினார்.

2017 ஆகஸ்ட்டில் ராகுல் காந்தி குஜராத்தின் பனஸ்கந்தாவில் குண்டுதுளைக்காத வாகனத்தை விடுத்து வேறு வாகனத்தில் பயணித்து வந்ததாக அஞ்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. அங்கே ராகுல் காந்தியின் தனியார் காரில் கல் வீசிய சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஒரு சிறப்பு பாதுகாப்புக் குழு வீரர் ஒருவரும் பொது பாதுகாப்பு வீரர் ஒருவரும் காயமடைந்தார்கள். இந்த விவகாரத்தை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ராகுல் காந்தி ஏப்ரல் 2015 முதல் ஜூன் 2017 வரை 121 வருகைகளில் 100 முறை சிறப்பு பாதுகாப்புக் குழு வீரர்களின் பாதுகாப்பையும் குண்டு துளைக்காத வாகனங்களையும் பெறவில்லை என்று தெரிவித்தார்.

இந்த கண்டுபிடிப்புகள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைக்கு அனுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வழக்கறிஞர் தரன்னம் சீமா காங்கிரஸ் கட்சி சார்பாக எழுதியது: “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் உங்கள் வசம் உள்ள விஷயங்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது. உண்மையானது அல்லது உணமையென உறுதியளிக்கப்பட்டது என்றால், இந்த தகவலை சிறப்பு பாதுகாப்புக்குழுவால் மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த தகவல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறப்பு பாதுகாப்புக் குழுவின் சட்டத்தின் விதிகளை மீறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே, இந்தியப் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்புக்குழுவின் பாதுகாப்பை பெறுபவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருளை நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வைத்திருக்கிறீர்கள்.”

சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி) என்பது பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பிற்காக குறிப்பாக உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு படை. இந்த படை தற்போது 3,000 வீரர்கள் பலத்துடன் நான்கு பேரைப் பாதுகாக்கிறது. அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி, மகள் பிரியாங்கா காந்தி ஆகியோர் ஆவர். முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு 2019 தேர்தலுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

1984 இல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து 1985 ஆம் ஆண்டில் சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி) உருவாக்கப்பட்டது. முன்னதாக, டெல்லி காவல்துறை (1981 க்கு முன்) சிறப்பு அதிரடிப் படை (1981 இல் உளவுத்துறையால் உருவாக்கப்பட்டது) பிரதமருக்கு குடியிருப்பு மற்றும் அருகாமைப் பாதுகாப்பை வழங்கியது.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமைக்கப்பட்ட செயலாளர்களின் மறுஆய்வுக் குழு, ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரியின் கீழ் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்க பரிந்துரைத்தது. மேலும், குறுகிய கால நடவடிக்கையாக புதுடெல்லியிலும் வெளியேயும் உடனடி பாதுகாப்பு வழங்க சிறப்பு அதிரடிப்படையை பரிந்துரைத்தது.

இதனையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு குழு, அமைச்சரவை செயலகத்தின் கீழ் ஒரு சிறப்பு பாதுகாப்பு பிரிவை (எஸ்.பி.யு) உருவாக்க பரிந்துரைத்தது. சிறப்பு பாதுகாப்பு பிரிவு பின்னர் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) என மறுபெயரிடப்பட்டது. , இது 1988-இல் நாடாளுமன்றம் எஸ்.பி.ஜி சட்டத்தை நிறைவேற்றும் வரை மூன்று ஆண்டுகள் நிர்வாக உத்தரவுகளின் கீழ் செயல்பட்டது.

அந்த நேரத்தில், இந்த சட்டத்தில் முன்னாள் பிரதமர்கள் இல்லை. 1989-இல் வி.பி. சிங் ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் குறைந்தது 10 ஆண்டுகள் எஸ்.பி.ஜி பாதுகாப்பை வழங்க எஸ்பிஜி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

2003 ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, தானியங்கி பாதுகாப்புக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் பதவி வகிப்பதை நிறுத்திய தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு கொண்டுவர மீண்டும் திருத்தப்பட்டது. மேலும், அச்சுறுத்தலின் அளவைப் பொறுத்து அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது.

வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, முன்னாள் பிரதமர்களான எச்.டி.தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால், பி.வி. நரசிம்மராவ் ஆகியோரின் எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு இறக்கும் வரை எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போதைய எஸ்பிஜி சட்டத்தின் கீழ், தற்போதைய பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது முன்னாள் பிரதமரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை மறுக்க முடியும். மன்மோகன் சிங்கின் மகள்கள் அவர் பிரதமர் பதவி முடிந்த பிறகு எஸ்.பி.ஜி பாதுகாப்பை மறுத்தனர்.

India Narendra Modi Sonia Gandhi Rahul Gandhi All India Congress Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment