Advertisment

அடுத்த முப்படைத் தளபதி யார்? நியமன செயல்முறைகளை ஆரம்பித்தது இந்திய அரசு

பிபின் ராவத் மறைவிற்கு பிறகு சீனியாரிட்டி அடிப்படையில் அக்குழுவின் தலைவராக எம்.எம். நரவானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
ராணுவ தளபதி நரவானே

முப்பை தளபதிகளின் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராணுவ தளபதி எம்.எம். நரவானே (File)

next CDS: அடுத்த முப்படைத் தளபதியை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பமாகிவிட்டது என்று வியாழக்கிழமை அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆனால் புதிய முப்படைத் தளபதியை தேர்வு செய்ய ஆகும் காலம் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

Advertisment

இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் டிசம்பர் 8ம் தேதி அன்று நடந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து முப்படைத் தளபதிகளின் சில பொறுப்பை, முப்பை தளபதிகளின் குழு தலைவராக உள்ள எம்.எம். நரவானே மேற்கொண்டு வருகிறார். ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை தளபதிகளை உள்ளடக்கிய இந்த குழு ராணுவம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி வருகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட முப்படை தளபதி பொறுப்பை 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி எடுத்துக் கொண்டார் ராவத். முப்படைத் தளபதி இந்த குழுவின் நிரந்தர தலைவராக பணியாற்றுவார். பிபின் ராவத் மறைவிற்கு பிறகு சீனியாரிட்டி அடிப்படையில் அக்குழுவின் தலைவராக எம்.எம். நரவானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் ராவத்தின் மரணம் எதிர்பாராத சூழ்நிலையை ஏற்படுத்திய நிலையில், பொறுப்புகள் அனைத்தும் பணி மூப்பு அடிப்படையில் குழுவின் தலைவர், பழைய முறைப்படி எம்.எம். நரவானே தோள்களில் விழுந்தன. இந்த அமைப்பு சுதந்திரம் பெற்றதில் இருந்து நடைமுறையில் உள்ளது. COSC இன் தலைவராக பணியாற்ற, ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள ஒரு சேவை தலைவர் தேர்வு செய்யப்படுகிறார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

ஆனால் தற்போது குழுவின் தலைவராக பணி மூப்பு காரணமாக நரவானே பொறுப்பேற்றுள்ளார். இந்திய விமானப்படை தளதி வி.ஆர். சௌத்ரி மற்றும் கப்பற்படை தளபதி ஆர். ஹரி குமார் ஆகிய இருவரும் நரவானேவை விட இரண்டு வருடங்கள் ஜூனியர்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நரவானே ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் முப்படைத் தளபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில் மேலும் 3 ஆண்டுகள் பணியாற்றுவார். லெஃப்டினண்ட் ஜெனரல்கள் 60 வயதிலும், ஜெனரல்கள் 62 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர். முப்படைத் தளபதி 65 வயதில் ஓய்வு பெறுகிறார்

அவருடைய பணி மூப்பு அவரை முப்படைத் தளபதிக்கான சரியான தேர்வாக மாற்றியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. . அவர் நாட்டிலேயே மிக மூத்த ராணுவ அதிகாரி மட்டுமல்ல, பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலரும் முப்படைத் தளபதி ராணுவத்தில் இருந்து வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்ற ஒரு கோர ஹெலிகாப்டர் விபத்து

ஜெனரல் ராவத்தின் கீழ், மூன்று சேவைகளும் ஒருங்கிணைந்த தியேட்டர் கட்டளைகளின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டன—நிலத்திற்கு மூன்று, மற்றும் வான் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்காக தலா ஒரு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும், சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் மற்றும் இந்த புதிய ஒருங்கிணைந்த முப்படைகளின் தியேட்டர்களின் தளபதி யாரிடம் தங்களின் ரிப்போர்ட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்பதில் இந்த மூன்று பிரிவிலும் சில வேறுபாடுகள் இருந்தன.

ஜெனரல் நரவானே தான் அடுத்த முப்படைத் தளபதியாக வருவார் என்று பலரும் கூறுகின்றனர். அவர் பிபின் ராவத்துடன் நெருங்கி பணியாற்றியதும், பிபினுக்கு பிறகு ராணுவ தளபதியாக நரவானே பொறுப்பேற்றுக் கொண்டதும் அதற்கான சில முக்கிய காரணங்களாக பலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் அதில் சில சிக்கல்கள் உள்ளன. பிபின் ராவத் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முடிவில் தான் ஓய்வு பெறுவார். அப்போது நரவானே ஓய்வே பெற்றிருப்பார்.

ஜெனரல் நரவனே ஓய்வு பெறுவதற்கு முன் பதவி உயர்வு பெற்றால், துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்தியை மிக மூத்த ராணுவ அதிகாரியாக பதவி உயர்வு அடைந்திருப்பார். லெப்டினன்ட் ஜெனரல் மொஹந்திக்கு அடுத்தபடியாக மூத்த ராணுவ தளபதியாக வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்கே ஜோஷி இருப்பார். மொஹந்தியும் ஜோஷியும் ஜனவரி இறுதியில் ஓய்வு பெறுவார்கள், அவர்களில் ஒருவர் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படாவிட்டால். ஏப்ரல் மாதம் வரை ஜெனரல் நரவனே இராணுவத் தளபதியாக இருந்தால், கிழக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே மிக மூத்த இராணுவ அதிகாரியாக மாறுவார், மேலும் இராணுவத்தை வழிநடத்த ஜெனரல் பதவியைத் தேர்ந்தெடுப்பார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment