பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், பெகாசஸ் ( Pegasus) என்ற இஸ்ரேலிய ஸ்பைவேரைப் பயன்படுத்தி இந்தியாவின் பத்திரிகையாளர்களும் , மனித உரிமை ஆர்வலர்களும் வேவு பார்க்கப்பட்டனர் என்று சொல்லியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில், கடந்த செவ்வாயன்று இஸ்ரேலிய என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரனையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது. தனது 1,400 பயணர்கள் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் தாக்கப்பட்டுள்ளனர் என்று வாட்ஸ்அப் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறது.
அமெரிக்க, கலிபோர்னியா சட்டங்களை மீறியதாகவும், வாட்ஸ்அப் விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் இந்த வழக்கில் வாட்ஸ்அப் குற்றம் சாட்டியிருக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க -
இந்தியாவில் இந்த கண்காணிப்புக்கு உள்ளானவர்களின் மொத்தம் எண்ணிக்கையயும், அவர்களின் அடையாளங்களையும் வெளிப்படுத்த வாட்ஸ்அப் மறுத்துவிட்டது. இருந்தாலும், அதன் செய்தித் தொடர்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், " இந்தியாவில் யாரெல்லாம் வேவு பார்க்கப்பட்டனர் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் அறியும், நாங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு பெகாசஸ் ஸ்பைவேர் பற்றி கூறி வருகிறோம் " என்று தெரிவித்தார்.
மேலும் " இந்திய ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஸ்பைவேரின் பெரிய இலக்காக இருந்துள்ளனர். எத்தனை பேர் என்பதை தற்போது என்னால் சொல்ல முடியாவிட்டாலும், எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்தியாவில் குறைந்தது இருபதிற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தலித் ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் போன்றோரை வாட்ஸ்அப் நிறுவனம் நேரடியாக தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளது. அதில், உங்களது தொலைபேசி, கடந்த 2019 மே வரையில் இரண்டு வார காலமாவது அதிநவீனமகா கண்காணிக்கப்பட்டது என்று சொன்னதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேல் என்எஸ்ஓ குழுமமும் இது குறித்து ஒரு அறிக்கையை விட்டுள்ளது. அதில், நாங்கள் எல்லா விதத்திலும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம், எங்களை நிரூபிக்க போராடுவோம் என்று சொல்லியிருக்கிறது. எங்கள் தொழில்நுட்பம் மனித உரிமை ஆர்வலர்களையும் , ஊடகவியலாளர்களையும் கண்காணிக்கும் நோக்கில் வடிவமைக்கப்படவில்லை, அதற்காக நாங்கள் உரிமம் கொடுக்கவில்லை. கடந்த மே மாதம் முதன் முதலில் இந்த தொழில்நுட்பம் குறித்த சந்தேகம் எழுப்பப்பட்ட பின்னர், மனித உரிமைக் கொள்கை என்பதை தனியாக வகுத்து பொது மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்காது வகையில் மென்போருகுள் விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் பென்பொருள் சேவை அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டும் தான் என்று சொல்லியுள்ளது.
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள, உள்துறை செயலாளர் ஏ.கே பல்லா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஏ பி சாவ்னி, ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த பதிலும் வரவில்லை.
கனடா நாட்டில் செயல்படும் சிட்டிசன் ஆய்வகம் இது தொடர்பான பல ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. அரபு மனித உரிமை ஆர்வலர்கள் தாங்கள் கண்கானிக்கப்படுகிறோம் என்று முதன் முதலில் இந்த சிட்டிசன் ஆய்வகத்தை அணுகும் போது தான் இஸ்ரேல் என்எஸ்ஓ ஸ்பைவேர் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் வேவு பார்க்கப்படுகின்றனர் என்பதை கண்டறிய முடிந்தது.
இஸ்தான்புல்லில் உள்ள தனது நாட்டின் தூதரகத்தில் கொல்லப்படுவதற்கு முன்பு கஷோகியைக் கண்டுபிடிப்பதில் அதன் ஸ்பைவேர் சவுதி அரேபியாவிற்கு முக்கிய துடுப்புச்சீட்டாக இருந்தது என்ற பொதுவான கருத்தும் நிலவி வருகிறது. பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுடனான தனது ஒப்பந்தத்தை என்எஸ்ஓ குழுமம் நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பின் வட்டாரங்கள் கூறுகையில், " வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் குருந் தகவல்கள் எல்லாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் (என்கிரிப்ஷன் ) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாட்ஸ்அப் மூலம் மொபைல் போன்களே தாக்கப்படும் போது தான் சிக்கல் ஆரம்பிக்கிறது."