Governor PM Meet in Delhi Tamil News: கடந்த புதன்கிழமை, தமிழ்நாடு தொடர்பான சில முக்கிய பிரச்சினைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் டெல்லியில் சந்தித்துப் பேசினார் என ராஜ் பவனிலிருந்து வியாழக்கிழமை செய்திகள் வெளியானது.
நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பிரதம மந்திரி அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருடனான ஆளுநரின் இந்த சந்திப்பின்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது குறித்த தகவல் எதுவும் இந்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள பெரிய சதி குறித்து பல்நோக்கு கண்காணிப்புக் குழு (Multi-Disciplinary Monitoring Agency (MDMA)) விசாரணை நடத்தியதாக உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாள்தான் ஆளுநரின் டெல்லி சந்திப்பு நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வியாழக்கிழமை டெல்லியில் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பன்வரிலால் விவாதித்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து நவம்பர் 6-ம் தேதி ஆளுநர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"