ரயில்வே பட்ஜெட் 2018: புதிய ரயில் திட்டங்களுக்கு 1,48,000 கோடி ஒதுக்கீடு!

ரயில்வே திட்டங்களுக்காக 1,48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே, மிக அதிகமாக ஒதுக்கப்பட்ட தொகை இது தான்

2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் ரயில்வே துறை தொடர்பான அறிவிப்புகள் பின்வருமாறு,

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

25,000 பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எஸ்கலேடர்ஸ் (escalators) வசதி ஏற்படுத்தப்படும்.

பெங்களூரில் ரூ.17,000 கோடி செலவில் 160 கி.மீ. புறநகர் பகுதிகளுக்கு ரயில் சேவை.

மும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு.

4,267 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர்.

அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை, சிசிடிவி வசதி.

600 முக்கிய ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படும்.

மும்பை – ஆமதாபாத் அதிவேக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே வழிதடங்கள் மேம்படுத்தப்படும்.

புதிய ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே, மிக அதிகமாக ஒதுக்கப்பட்ட தொகை இது தான்.

More details awaited…

×Close
×Close