Advertisment

இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் நியமனம்

பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் அனந்த நாகேஸ்வரன் நியமனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dr V Anantha Nageswaran

Dr V Anantha Nageswaran

Govt appoints Dr V Anantha Nageswaran as Chief Economic Advisor: திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், டாக்டர் வி அனந்த நாகேஸ்வரனை தலைமைப் பொருளாதார ஆலோசகராக (CEA) நியமிப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது, அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஒரு அறிக்கையில் கூறினார்.

Advertisment

பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன், நூலாசிரியர், ஆசிரியர் மற்றும் ஆலோசகராக, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல வணிகப் பள்ளிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் கற்பித்துள்ளார் என்று மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் செயல்படுத்தப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களின் நன்மைகளை பட்டியலிட்டது உட்பட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவதில் CEA முக்கிய பங்கு வகிக்கிறார், மேலும் அந்த வருடத்தில் அரசாங்கத்தின் பொருளாதார அறிக்கை அட்டை மற்றும் சாத்தியமான சீர்திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளை வழங்குகிறார். இந்த ஆண்டு பொருளாதார கணக்கெடுப்பு, வழக்கமான இரண்டு பதிப்பிற்கு மாறாக ஒரே ஒரு தொகுதியுடன், குறைக்கப்பட்ட பதிப்பாக இருக்கும்.

முந்தைய தலைமை பொருளாதார ஆலோசகர் KV சுப்ரமணியனின் மூன்று ஆண்டு பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைந்த பிறகு, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் பாமி துவா; பூனம் குப்தா, இயக்குநர் ஜெனரல், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER); மற்றும், முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் உட்பட பல பெயர்கள் அந்த பதவிக்கு பரிசீலிக்கப்பட்டன;

அனந்த நாகேஸ்வரன் IFMR பட்டதாரி வணிகப் பள்ளியின் முதல்வராகவும், கிரியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். 2019 முதல் 2021 வரை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் முதுகலை டிப்ளமோ மேலாண்மை பட்டமும், ஆம்ஹெர்ஸ்டில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அவர் பொதுக் கொள்கையில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மையமான தக்ஷஷிலா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

அனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் தனது கட்டுரைகளில் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மறுமதிப்பீட்டின் அவசியத்தையும் பொருளாதாரத்தின் பல துறைகளில் தொற்றுநோய்களின் தாக்கத்தையும் வலியுறுத்தினார்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷுடன் இணைந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸில் அக்டோபர் 2021 இல், எழுதிய அனந்த நாகேஸ்வரன் பணவீக்கத்தை "உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய கல்வியியல் சவால்" என்று பட்டியலிட்டிருந்தார்.

"... 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்து, உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் பணவீக்கத்தை மேலே தள்ள துணிச்சலுடன் முயற்சி செய்தனர், இப்போது அவர்கள் அதைக் கீழே கொண்டு வர போராடுகிறார்கள். மிக முக்கியமாக, பணவீக்கத்தை தூண்டுவதில் இப்போது, உணரக்கூடிய வேறுபாடு உள்ளது: இது ஊதிய உயர்வு அல்லது நிதி விரிவாக்கம் அல்ல. இது உலகளாவிய விநியோக அதிர்ச்சிகள்," என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நவம்பர் 2020 இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், அனந்த நாகேஸ்வரன், பணமதிப்பு நீக்கம் பொருளாதாரத்தை முறைப்படுத்த வழிவகுத்தது, நிதி பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஊக்கியாக செயல்பட்டது, பொருளாதாரத்தில் வேரூன்றிய முறைசாரா தன்மை பற்றிய விவாதத்தைத் தூண்டியது, நிறுவனங்கள் சட்டத்தின் பல தண்டனை விதிகளின் மீறல்களை குற்றமற்றதாக்கியது மற்றும் MSME- நிறுவனங்களை மறு வகைப்படுத்த வழிவகுத்தது என்று எழுதினார்.

"பொதுமக்கள் பழைய முறைகள் மற்றும் நடைமுறைகளை கைவிட்டு மிகவும் இணக்கமான கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்பதால் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி, தங்கள் பங்கை ஆற்றியுள்ளன. இது மீளமுடியாததாகத் தோன்றும் நீண்ட காலப் போக்கு. கொரோனா தொற்றுநோயின் நீடித்த வளர்ச்சி தாக்கம் குறித்த தற்போதைய நிச்சயமற்ற தன்மை தணிந்தவுடன், இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் நன்மைகள் பிரகாசிக்கும், ”என்று அனந்த நாகேஸ்வரன் எழுதினார்.

சமீபத்தில் மிண்ட் இதழில் ஒரு கட்டுரையில், ஆரோக்கியமான இந்தியாவுக்காக கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

அனந்த நாகேஸ்வரன் பல நூல்களை எழுதியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி குல்சார் நடராஜனுடன் இணைந்து இந்தியா வளர முடியுமா? மற்றும் நிதியத்தின் எழுச்சி: காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சைகள் ஆகிய நூல்களையும் மற்றும் உலக வங்கியின் அப்போதைய இயக்குநரும், இப்போது நிதிச் செயலாளருமான டி வி சோமநாதனுடன் இணைந்து தி எகனாமிக்ஸ் ஆஃப் டெரிவேடிவ்ஸ் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன், கொள்கை வகுப்பாளர்கள் விரிவான ஆலோசனைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அனந்த நாகேஸ்வரன் எழுதியிருந்தார்.

"கொள்கை வகுப்பாளர்கள் தோல்வியுற்றவர்களின் குறைகளை முன்கூட்டியே அறிந்து, தணிக்கும் உத்திகள் மற்றும் பதில்களை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அத்தகைய தயாரிப்பு என்பது பரந்த ஆலோசனை, பங்கேற்பை அங்கீகரிப்பது மற்றும் மாற்றத்தின் இணை உரிமைக்கான இடத்தை உருவாக்குவது. ரிஸ்க் மேனேஜ்மென்ட் மூலம் இது சரியான கொள்கை உருவாக்கம் ஆகும், ஏனெனில் கொள்கை சீர்திருத்தத்தின் ஒரு துறையில் பின்னடைவு மற்ற சீர்திருத்தங்கள் மற்றும் பொதுவாக நிர்வாகத்தில் தொற்று விளைவை ஏற்படுத்தும்," என்று அவர் டிசம்பர் 7, 2020 அன்று "மிண்ட்" இதழில் எழுதினார்.

அனந்த நாகேஸ்வரனின் நியமனம் அரசியல் களத்தில் உள்ளவர்களால் வரவேற்கப்பட்டது. " அவரது நியமனத்தை நான் வரவேற்கிறேன்... நிதியமைச்சகத்தின் CEA அலுவலகத்தின் இழந்த அறிவுசார் வளர்ச்சியை அவர் மீண்டும் உருவாக்குவார் என்று நான் நம்புகிறேன்," என்று ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆனந்தை நன்கு அறிந்தவர் மற்றும் அவருடன் இணைந்து பல கட்டுரைகளை எழுதிய, காங்கிரஸின் தரவு பகுப்பாய்வு துறைக்கு தலைமை தாங்கும் அரசியல் பொருளாதார நிபுணர் பிரவீன் சக்ரவர்த்தி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment