தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் காலிஸ்தான் ஆதரவு வாக்கெடுப்புடன் தொடர்புடைய சுமார் 10,500 URL-களை மத்திய அரசு முடக்கியுள்ளது. சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் சமீபத்திய தரவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Govt blocked 28,079 social media accounts last year, majority from Facebook and X
“2021 முதல், காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு தொடர்பான சுமார் 10,500 URL-கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 (A)-ன் கீழ் முடக்கப்பட்டுள்ளன. மேலும், காலிஸ்தான் வாக்கெடுப்பை பரப்புவதற்காக தொடங்கப்பட்ட பல மொபைல் பயன்பாடுகள் சம்பந்தப்பட்ட துறையால் தடுக்கப்பட்டன... IT சட்டத்தின் பிரிவு 69 (A)-ன் கீழ் பி.எஃப்.ஐ (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தொடர்பான சுமார் 2,100 URL-கள் முடக்கப்பட்டுள்ளன” என்று ஒரு வட்டாரம் கூறியது. விடுதலைப் புலிகள், ஜம்மு காஷ்மீர் போராளிகள், வாரிஸ் பஞ்சாப் டி (பி.டபிள்யூ.டி) தொடர்பான பல தீவிரவாத பதிவுகள்/கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில், மத்த்ய அரசு மொத்தம் 28,079 URL-களை முடக்கியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை ஃபேஸ்புக் (10,976) மற்றும் எக்ஸ் (10,139) தளங்களைச் சேர்ந்தவை. அவை மோசடித் திட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த காலகட்டத்தில் 2,211 யூடியூப் கணக்குகள், 2,198 இன்ஸ்டாகிராம், 225 டெலிகிராம் மற்றும் 138 வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆண்டு வாரியாகப் முடக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை குறித்து பகிர்ந்த பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவர், 2022-ல் 6,775 சமூக ஊடகக் கணக்குகளும், 2023-ல் மொத்தம் 12,483 கணக்குகளூம் இந்த ஆண்டு 8,821 சமூக ஊடகக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2022-ல் எக்ஸ் தளத்தைச் சேர்ந்த 3,417 கணக்குகளும் 2023-ல் 3,772 கணக்குகளும் , செப்டம்பர் 30, 2024 வரை 2,950 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
2022-ல் ஃபேஸ்புக் தளத்தைச் சேர்ந்த 1,743 கணக்குகளும் 2023-ல் 6,074 கணக்குகளூம் இந்த ஆண்டு 3,159 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு பிரச்சாரங்களுடன் தொடர்புடைய 10,500 URL-களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
“முடக்கப்பட்ட பேஸ்புக் URL-களில் பெரும்பாலானவை பயனர்களை மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது ஆப் ஸ்டோர்களுக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டவை, அதிலிருந்து ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட்டைப் பதிவிறக்கம் செய்ய அல்லது வாட்ஸ்அப் குழுக்கள் வர்த்தகம், முதலீடு அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் அவர்களை மோசடிகள் மூலம் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று அதிகாரி கூறினார்.
2022-ல் 809 கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், 2023-ல் 862 மற்றும் இந்த ஆண்டு 540 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் யூடியூப்பில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “இன்ஸ்டாகிராமில், 2022-ல் 355 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, 2023-ல் 814 கணக்குகளும் இந்த ஆண்டு 1,029 இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப்பில், 2022-ல் 66 கணக்குகளும், கடந்த ஆண்டு 16 கணக்குகளும், இந்த ஆண்டு இதுவரை 56 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன” என்று அந்த அதிகாரி கூறினார்.
“இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் சில தளங்கள் மற்றும் ஆப்ஸில் உள்ளதாகக் கூறப்படும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடமிருந்து உள்ளீடுகள் அல்லது ஆதாரங்களைப் பெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த URL-கள் முடக்கப்பட்டுள்ளன” என்று அந்த அதிகாரி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.