/tamil-ie/media/media_files/uploads/2022/09/nitin-gadkari.jpeg)
அனைத்து பயணிகள் கார்களிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அக்டோபர் 1, 2023க்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
அக்டோபர் 1, 2022 முதல் எட்டு இருக்கைகள் கொண்ட வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. நாட்டில் வாகனத் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறினார்.
இதையும் படியுங்கள்: திருமணமான, திருமணம் ஆகாத அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான சட்டப்பூர்வ கருக்கலைப்பு உரிமை – சுப்ரீம் கோர்ட்
"வாகனத் துறையால் எதிர்கொள்ளப்படும் உலகளாவிய சப்ளை சங்கிலித் தடைகள் மற்றும் பெரும் பொருளாதாரச் சூழலில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (எம்-1 வகை) குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்கும் திட்டத்தை 2023அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நிதின் கட்கரி ட்வீட் செய்துள்ளார்.
Safety of all passengers travelling in motor vehicles irrespective of their cost and variants is the foremost priority.
— Nitin Gadkari (@nitin_gadkari) September 29, 2022
மோட்டார் வாகனங்களின் விலை மற்றும் மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அவற்றில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்றும் நிதின் கட்கரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.