Advertisment

சிபிஐ, இ.டி. மூலம் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த முயற்சி: மல்லிகார்ஜூன கார்கே

நாடாளுமன்றத்தின் பழைய வளாகத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாளை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அவை நகர்ந்தாலும், பழைய கட்டிடம் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார்.

author-image
WebDesk
New Update
Parliament Special Session 2023

ராஜ்யசபாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பாரதிய ஜனதா மீது குற்றஞ்சாட்டி பேசினார்.

Parliament Special Session 2023: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையுடன் நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் பழைய வளாகத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் குறித்து பேசிய அவர், நாளை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அவை நகர்ந்தாலும், பழைய கட்டிடம் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார்.

Advertisment

தனது உரையின் போது, சபை நடவடிக்கைகளில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்களிப்பு அதிகரித்து வருவதை மோடி குறிப்பிட்டார்.
அப்போது, "சுமார் 600 பெண் எம்.பி.க்கள் இரு அவைகளின் கண்ணியத்தை உயர்த்தியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

Govt focusing on weakening ‘strong’ Opposition through CBI, ED, says Mallikarjun Kharge

இதற்கிடையில், ராஜ்யசபாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்புகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, “சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற மத்திய அமைப்புகளின் மூலம் "வலுவான" எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகளின் இழப்பு குறித்து மத்திய அரசை கடுமையாக சாடினார்.
2019-இல் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதற்கு காங்கிரஸின் எதிர்ப்பை நினைவு கூர்ந்த அவர், ஜம்மு காஷ்மீரில் இன்னும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர், இது எங்களின் எதிர்ப்பு சரியானது என்பதை நிரூபிக்கிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment