கடந்த மே மாதம், ஈரான் தன்னுடைய அணு ஆயுத ஒப்பந்தக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவினை வெளியேற்றியது.இதனால் கோபமடைந்த அமெரிக்கா, ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது.
வருகின்ற ஆகஸ்ட் நான்காம் தேதியில் இருந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ஈரானில் நடைமுறைக்கு வர இருப்பதால், ஈரானுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா மிக சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த பசர்கத் என்ற தனியார் வங்கியின் கிளை ஒன்றினை மும்பையில் நிறுவுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது ரிசர்வ் வங்கி.
ஈரான் நாட்டில் இருந்து தான் இந்தியா அதிக அளவில் கச்சாப் பொருட்களை வாங்குகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, பாதி பணத்தினை யூரோவாகவும், மீதத்தினை ஈரானில் இருக்கும் யூக்கோ வங்கியில் இந்திய பணமாகவும் முதலீடு செய்தது.
மேலும் இந்தியா, சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலரை ஈரானின் சபாகர் துறைமுகத்தின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது.
ஈரான் நாட்டு வங்கிகள் இந்தியாவிற்கு வரும் பணப் பரிவர்த்தனை, முதலீடு, ஏற்றுமதி, இறக்குமதி போன்ற செயல்பாடுகள் எளிமையடையும்.
ஈரான் நாட்டினுடைய வங்கி மட்டும் அல்லாமல், தென் கொரிய நாட்டின் வங்கிகள் இரண்டிற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
கடந்த வருடம், இந்தியாவில் தங்களுடைய வங்கிகளின் கிளைகளை நிறுவ பல்வேறு நாடுகளில் இருந்து 14 வங்கிகள் விண்ணப்பம் அனுப்பினர். அவற்றில் இரண்டு சீன வங்கிகள், நான்கு தென்கொரிய வங்கிகள், இரண்டு நெதர்லாந்து நாட்டு வங்கிகள், செக் குடியரசு, இலங்கை, மற்றும் மலேசியா நாட்டில் இருந்து தலா ஒரு வங்கிகள் வீதம் விண்ணப்பம் அனுப்பினர்.
அதில் மலேசியா நாட்டின் வங்கியின் விண்ணப்பத்தினை இரண்டாம் முறையாக நிராகரித்தது. ஈரான் நாட்டில் இருந்து பசர்கத் மற்றும் பெர்சியன் வங்கிகள் தங்களுடைய விண்ணப்பத்தினை அளித்தன. ஆனால் பசர்கத் வங்கிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை, உள்த்துறை அமைச்சகம், நிதித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்த பின்பு பசர்கத் வங்கி மும்பையில் கிளையைத் தொடங்க உரிமம் பெற்றுவிடும்.