தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய பதிவுகளின்படி, அலுவலக ரீதியான ஆய்வில், 2019-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் போலி சாதிச் சான்றிதழில் அரசு வேலைகள் பெறப்பட்ட 1,084 புகார்களைக் கண்காணித்தது. இந்த வழக்குகளில் இருந்து, 92 பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) பதிவுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: In 9 years, Govt got 1,084 complaints of fake caste certificates for jobs; 92 sacked
இந்த எண்ணிக்கை (விளக்கப்படத்தைப் பார்க்கவும்) உயர்மட்ட வழக்கின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த ஆண்டு புஜா கேத்கர், சிவில் சர்வீசஸ்ஸில் இடம் பெறுவதற்காக ஜாதி மற்றும் ஊனமுற்றோர் சான்றிதழ்களை சமர்ப்பித்ததாகக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
அரசாங்கத்தின் கீழ் உள்ள 93 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 59-ல் ஆர்.டி.ஐ பதிவுகள் கிடைக்கப்பெற்றன. இந்த காலகட்டத்தில் ரயில்வே 349 புகார்களை பதிவு செய்துள்ளதாக அவர்கள் காட்டுகிறார்கள். இதைத் தொடர்ந்து அஞ்சல் துறை (259), கப்பல் போக்குவரத்து அமைச்சகம் (202) மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை (138) புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பல, பல்வேறு நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருப்பதாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை மாதம் பூஜா கேத்கரின் சர்ச்சையைத் தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது ஆர்.டி.ஐ பதில் பெறப்பட்டது. 2010-ம் ஆண்டு அப்போதைய மக்களவை பா.ஜ.க எம்.பி ரத்திலால் காளிதாஸ் வர்மா தலைமையிலான எஸ்சி/எஸ்டி நலனுக்கான அப்போதைய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) இத்தகைய புகார்களின் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது.
தவறான சாதிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்குகள் தொடர்பான அனைத்து அமைச்சகங்கள் / துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து அவற்றின் முன்னேற்றம் மற்றும் பணி நீக்கத்தைக் கண்காணிப்பதற்கு, பிரச்னையை நல்ல முறையில் சமாளிக்க செயல்திட்டம் வகுக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து தகவல்களைப் பெற வேண்டும் என்று கமிட்டி வலுவாகப் பரிந்துரைத்தது.
இது தொடர்பான முதல் தகவல் தொடர்பு, 2010 ஜனவரி 28-ல், அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு, விண்ணப்பதாரர் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களுக்கு எதிராக தவறான / போலி சாதிச் சான்றிதழின் அடிப்படையில் நியமனம் பெற்றதாக/குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடர்பாக, அவர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரிக்கும் நிகழ்வுகள் குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) வெளியிடப்பட்டது. இதற்கு காலக்கெடு மார்ச் 31, 2010 என கொடுக்கப்பட்டது.
இத்தகைய தரவுகளைத் தேடும் கடைசித் தகவல், மே 16, 2019-ல் வெளியிடப்பட்டது என்று பதிவுகள் காட்டுகின்றன. “இன்று வரை, (இந்த) துறைகளில் அத்தகைய தரவு எதுவும் மையமாகப் பராமரிக்கப்படவில்லை” என்று ஆகஸ்ட் 8, 2024 தேதியிட்ட ஆர்.டி.ஐ பதிலில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) தெரிவித்துள்ளது.
“சாதிச் சான்றிதழை சரியான நேரத்தில் சரிபார்ப்பதை உறுதிசெய்ய அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சாதி சான்றிதழை வழங்குவதும் சரிபார்ப்பதும் சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) கூறியது.
வேலைவாய்ப்பிற்கான அரசாங்கத்தின் இடஒதுக்கீடு எஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு 15 சதவிகிதம், எஸ்டி-க்கு 7.5 சதவிகிதம், ஓ.பி.சி-க்கு 27 சதவிகிதம், இ.டபிள்யூ.எஸ்-க்கு 10 சதவிகிதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் வழங்கப்படுகிறது.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) குறிப்பிட்டுள்ள படி, 1993-ல் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவில் கூறப்பட்டுள்ளது: “ஒரு அரசு ஊழியர் நியமனம் பெறுவதற்காக தவறான தகவலை வழங்கியது அல்லது தவறான சான்றிதழை வழங்கியது கண்டறியப்பட்டால், அவரைப் பணியில் வைத்திருக்கக்கூடாது.” என்று கூறுகிறது.
ஜூலை மாதம், யு.பி.எஸ்சி, பூஜா கேத்கரின் பெயர், அவரது தந்தை மற்றும் தாயின் பெயர், அவரது புகைப்படம்/கையொப்பம், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் முகவரி என அவரது அடையாளத்தை போலியாக மாற்றி தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடி செய்ததாக குற்றம் சாட்டியது.
கேத்கர் இந்த மாத தொடக்கத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி, தனது சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தை ரத்து செய்து, எதிர்காலத்தில் அவர் எந்தத் தேர்வையும் எழுதுவதற்கு தடை விதித்த யு.பி.எஸ்.சி-யின் அறிவிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“