PM Ujjwala Yojana beneficiaries: பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை எல்பிஜி சிலிண்டருக்கு ₹200ல் இருந்து ₹300 ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை (அக்.4) அறிவித்தார்.
உஜ்வாலா பயனாளிகள் தற்போது 14.2 கிலோ சிலிண்டருக்கு ₹903 சந்தை விலையில் ₹703 செலுத்துகின்றனர். மத்திய அமைச்சரவையின் முடிவிற்குப் பிறகு, அவர்கள் இப்போது ₹603 செலுத்துவார்கள்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உஜ்வாலா பயனாளிகளுக்கான எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ₹100 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர், “கடந்த ஒன்பது ஆண்டுகளில், பெண்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக, பல வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம், ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, உள்நாட்டு எல்பிஜி விலை ₹200 குறைக்கப்பட்டபோது, அது ₹900ஐ எட்டியது. இருப்பினும், உஜ்வாலா பயனாளிகளுக்கு, ₹700 ஆக இருந்தது” என்றார்.
2023-24 நிதியாண்டிலிருந்து 2025-26 வரை மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வெளியிடுவதற்கு PMUY நீட்டிக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
75 லட்சம் கூடுதல் உஜ்வாலா இணைப்புகள், PMUY பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 10.35 கோடியாக உயர்த்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“