விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு!

மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

author-image
WebDesk
New Update
Govt invites farm leaders for more talks, at a date of their choosing

Harikishan Sharma

Govt invites farm leaders for more talks, at a date of their choosing :  மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் ஞாயிற்றுக் கிழமை அன்று, மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கும், அவர்களின் விருப்ப நேரத்தில், அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.

Advertisment

க்ராந்திகரி கிஷான் யூனியன் பஞ்சாப் மாநில தலைவர் டாக்டர் தர்ஷன் பால், விவேக் அகர்வாலுக்கு, வேளாண் துறை அமைச்சரவையின் இணை செயலகம் எழுதியுள்ள கடிதத்தில், முன்பு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் உங்களின் சந்தேகங்கள் குறித்த தகவல்களை பரிந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு நீங்கள் விரும்பும் நேரத்தை தெரிவிக்கவும். விக்ய பவனில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்தில் முடிவினை எட்டுவோம். எனவே இந்த போராட்டமும் விரைவில் முடிவுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதம் பாலுக்கும் இதர 39 விவசாய சங்க தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. டிசம்பர் 16ம் தேதி அன்று அகர்வாலுக்கு விவசாய சங்கத்தினர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசு வேளாண் சட்டங்களில் கொண்ட வர இருக்கும் மாற்றங்கள் குறித்த பரிந்துரையை நிராகரித்திருந்தது.

Advertisment
Advertisements

மேலும் படிக்க :போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முன்மொழிவை விவசாயிகள் புறக்கணிப்பது ஏன்?

மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் கடைசியாக டிசம்பர் 8ம் தேதி அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கத்தின் 13 பிரதிநிதிகளை சந்தித்து அன்று பேசினார். அடுத்த நாள் மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சங்கத்தினருக்கு சலுகைகளை பரிந்துரை செய்தது. ஆனால் டிசம்பர் 16ம் தேதி அன்று அவர்களின் மறுப்பினை மின்னஞ்சல் மூலம் அகர்வாலுக்கு தெரிவித்தனர். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கத்தினருக்கு அழைப்புவிடுக்க தயாராய் உள்ளோம் என்று குறிப்பிட்டார். மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Farmer Protest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: