Harikishan Sharma
Govt open to talks but not to repeal of laws; farmers hold a hunger strike : நரேந்திர மோடி அரசு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் மூன்று சட்டங்களை ரத்து செய்யும் கோரிக்கையை ஏற்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளது என்று கூறியுள்ளது.
ரத்து என்பது சாத்தியமில்லை. 0-1 என்ற கணக்கில் அது வேலை செய்யாது. சட்ட திருத்தங்களுக்கான வாய்ப்புகளை இந்த அரசு வழங்கியது. மேலும் மூன்று சட்டங்களில் இருக்கும் வார்த்தைகளை மாற்றவும் தயார் நிலையில் உள்ளது என்று க்ரிஷி பவனில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்திருக்கும் முக்கிய அதிகாரி ஒருவர் கூறினார். கதவுகள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
19வது நாள் போராட்டத்தில், 32 விவசாய சங்கத்தில் இருக்கும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்ய சிங்கு எல்லையில் உண்ணாவிரத போராட்டத்தை 8 மணிக்கு ஆரம்பித்தனர். இதற்கிடையில் கண்டெய்னர்களை வைத்து தேசிய நெடுஞ்சாலைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர், ஏற்கனவே மணல் மற்றும் முள்வேலிகளால் தடுப்புகளை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு தரப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டாவது நாளாக சந்திக்க உள்ளார்.
32 விவசாய சங்கங்களில் இருக்கும் சில முக்கிய நபர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு சில தலைவர்கள் நடுநிலையை எட்டுவதற்கான தேவையை புரிந்து கொண்டுள்ளனர். முற்றிலும் வெளியேறுதல் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் அவர்கள் அதிகபட்ச நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றனர் என்று மேற்கொண்டு விவரிக்காமல் அவர் கூறினார்.
FICCI நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், சமீபத்திய சீர் திருத்தங்கள் இந்திய விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது அவர்களின் குரலுக்கு செவி சாய்க்கவும், அவர்களின் சந்தேகங்களை போக்கவும், அவர்களுக்கு உத்தரவாதங்களை வழங்கவும் தயாராக உள்ளோம். நம்முடைய அரசு எப்போதும் விவாதம் மற்றும் உரையாடலுக்கு தயாராக இருக்கும் என்று கூறினார்.
அனைத்து துறைகளுக்கும் முதன்மையானது விவசாயம் என்று மேற்கோள் காட்டிய சிங், நம்முடைய உற்பத்தி மற்றும் கொள்முதல் அதிக அளவாக உள்ளது. மேலும் நம்முடைய சேமிப்பு கிடங்குகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. நம்முடைய விவசாய துறைக்கு எதிராக பிற்போக்கு தனமாக முடிவுகள் எட்டப்படும் என்ற கேள்விக்கு இடமே இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தோமர் கூறுகையில், அரசு பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக உள்ளது. அவர்கள் எப்போது பேச்சுவ்வார்த்தைக்கு தயாராக இருக்கின்றார்களோ அப்போது நிச்சயம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார். குஜராத்தின் காந்தி நகரில், மத்திய விவசாய துறைத் துணை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா, போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக கூறப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்ட வரம்பிற்குள் கொண்டு வரத் தேவையில்லை என்று கூறினார்.
மேலும் படிக்க : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையை முடக்கத் திட்டம்
மாநில பாஜக தலைமையகம் ஸ்ரீகமலத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், நாங்கள் இதனை அறீமுகம் செய்த போது அதற்கு சட்டப்பூர்வ ஆதரவு தேவைப்படவில்லை. அரசின் ஒரு அமைப்பாகவே இருந்தது நாங்கள் உருவாக்கியது, மோடி உருவாக்கியது. அதனை சட்டவரம்பிற்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் தமிழகம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் தோமர் அனைத்திந்திய கிஷான் ஒருங்கிணைப்பு கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
நாங்கள் இந்த மூன்று சட்டங்களையும் வரவேற்கின்றோம். கடந்த முப்பது ஆண்டுகளாக திறந்த சந்தைகளுக்காகவும், தாராளமய அமைப்பிற்காகவும் போராடி வருகின்றோம். விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்றால் தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் ரீதியாகவும், பொருளாதார சீர்திருத்தங்கள் ரீதியாகவும், விவசாய சீர்திருத்தங்கள் ரீதியாகவும் நமக்கு சீர் திருத்தங்கள் தேவை என்று ஷெட்கரி சங்கதான தலைவர் குன்வந்த் பாட்டீல் ஹங்கர்கேகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இந்த போராட்டத்தில் முக்கியமாக பங்கேற்றிருக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகளை தவிர இந்தியாவில் இதர மாநில விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தோமர் இதே போன்ற ஆலோசனை கூட்டத்தை உத்திரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மேற்கொண்டனர். மற்றொரு கூட்டத்தில், தோமர், ஹரியானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்துரையாடினார், அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் கடிதத்தை சமர்ப்பித்தனர். சட்லஜ், யமுனா நதி நீர் கால்வாயில் இருந்து நீரினை பகிர்வது தொடர்பான பஞ்சாபுடனான ஒரு பழைய தவறையும் மேற்கோள் காட்டினார்.
மேலும் படிக்க : சீனாவின் விவசாய முறை எப்படி வறுமையை ஒழிக்க உதவியது?
“SYL என்பது ஹரியானாவின் உயிர்நாடியாகும். ஹரியானா விவசாயிகள் கடந்த 45 ஆண்டுகளாக 19 லட்சம் ஏக்கர் அடி நீரில் தங்கள் பங்கை இழந்துள்ளனர். நீரின் முக்கியத்துவம் எம்.எஸ்.பி.க்கு சற்றும் குறைவில்லாதது. எனவே, ஹரியானா விவசாயிகளின் பங்காக 19 ஏக்கர் அடி நீரை பஞ்சாபிலிருந்து கிடைக்கச் செய்ய வேண்டும், இதனால் ஹரியானாவில் 19 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய முடியும். இதற்கு நீர்வள அமைச்சகம் உதவ வேண்டும், ”என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புதிய சட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை தோற்றுவிக்கவே உருவாக்கப்பட்டது என்று தோமர் குறிப்பிட்டார். இந்திய அரசின் நோக்கமும் கொள்கையும் நன்மைக்காகவே. நாங்கள் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களை சமாதானப்படுத்த முயன்றோம். அவர்கள் (இந்த சட்டங்களின் அனைத்து பிரிவுகளையும் விவாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் என்று தோமர் கூறினார். மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபப்டுமா என்று கேட்ட போது தோமர், அவர்களின் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினார் அவர்.
முந்தைய ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. கடைசியாக திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தை, டிசம்பர் 9 அன்று, ஷாவுக்கும் விவசாய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது.
குறைந்தபட்ச உற்பத்தி விலை (எம்.எஸ்.பி) அடிப்படையிலான கொள்முதல் மற்றும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (ஏ.பி.எம்.சி) மண்டிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பரிவர்த்தனைகளில் சமத்துவம் தொடர்வது குறித்த எழுத்துப்பூர்வ உத்தரவாதம் உட்பட நெருக்கடியைத் தீர்ப்பதற்காக புதிய திட்டங்களை மத்திய அரசு நீட்டித்தது. ஆனால் விவசாய சங்கத் தலைவர்கள் இந்த முன்மொழிவுகளை நிராகரித்து, சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை தங்கள் போராட்டங்களை விரிவுபடுத்துவதாகக் கூறினர்.
(With Krishn Kaushik in New Delhi and Parimal Dabhi in Gandhinagar)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.