பண்டோரா பேப்பர்ஸ்: மத்திய ஏஜென்சிகள் விசாரணைக்கு அரசு உத்தரவு

Pandora Papers probe: மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர்

கடந்த 2015ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் (panama papers) வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) ஆவணங்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களும் பண்டோரா பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ளன.

இவ்விவகாரம் விஷவருபம் எடுத்ததைத் தொடர்ந்து, பண்டோரா பேப்பர்ஸ் புலனாய்வு விசாரணையைக் கண்காணிக்க பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் விசாரணை அமைப்புகள் நடத்தும் விசாரணையைக் கண்காணிக்கச் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர். இந்த குழுவிற்கு மத்திய நேரடி வரிகள் வாரிய (சி.பி.டி.டி.) தலைவர் தலைமை தாங்குகிறார்.

இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் கூறுகையில், ” உறுதியான விசாரணை நடைபெறுவதற்காக, சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் பற்றிய தகவல்களை வெளிநாட்டு அரசுகளிடம் மத்திய அரசு கேட்டு பெறும். வரி ஏய்ப்பில் ஈடுபட்டோரைக் கண்டறியும் விசாரணை குழுவின் ஒரு பகுதியாக இந்திய அரசும் நிச்சயம் இருக்கும்.

செப்டம்பர் 9 2021 நிலவரப்படி, பனாமா மற்றும் பண்டோரா பேப்பர்ஸ்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தோராயமாகக் கணக்கில் வராத ரூ. 20,352 கோடி வரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கருப்புப் பணம் தொடர்பாக ஆராயும் மத்திய அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) தலைமை தாங்கும் இரண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தப் பணம் பதுக்கிய குற்றச்சாட்டு மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

2014இல் பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் எஸ்ஐடி தொடங்கப்பட்டது. இதுவரை இந்த குழு ஏழு அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய எஸ்ஐடி தலைவரும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான எம் பி ஷா, “இது மிகவும் முக்கியமான விஷயம். நிபுணர்கள் என்று கூறப்படுபவர்களுக்குத் தெரியாமல் நாட்டில் நிகழ்வதை விசாரணை அறிக்கை காட்டுகிறது. பண்டோரா பேப்பர்களில் உள்ள வெளிநாட்டு சொத்து விவரங்கள் குறித்து விரிவான அறிக்கையை எழுதி அரசிடம் சமர்ப்பிப்பேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய குழுவின் துணைத் தலைவர் நீதிபதி அரிஜித் பசாயத் , ” இதுகுறித்து சிபிடிடியை அணுகினேன். பண்டோரா பேப்பர்ஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளைக் குறித்தும் கேட்டறிந்தேன். வரி ஏய்ப்பாளர்களால் இந்த அமைப்புக்கு ஏற்பட்டுள்ள சவாலை தற்போதைய விசாரணை காட்டுகிறது” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Govt orders cbdt led probe into pandora papers expose

Next Story
விவசாயிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பு; பிரியங்கா காந்தி உண்ணாவிரதம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com