/indian-express-tamil/media/media_files/2024/12/15/fE4irbwPFOEIeQ57kjpk.jpg)
ராஜ்யசபாவில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகள் குறித்த விவாதம் திங்கள்கிழமை தொடங்க உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. (கோப்பு படம்)
மக்களவை மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் இரண்டு மசோதாக்களை திங்கள்கிழமை அறிமுகப்படுத்த பட்டியலிட்டிந்த நிலையில், மத்திய அரசு அவற்றை இந்த வார இறுதி வரை மக்களவையில் அறிமுகப்படுத்துவதை ஒத்திவைத்துள்ளது என்று வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
ஆங்கிலத்தில் படிக்க: Govt postpones introduction of One Nation One Election Bills in Lok Sabha from tomorrow
அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா) 2024 ஆகியவை மக்களவையில் திங்கள்கிழமை அவை நிகழ்சிநிரல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. இருப்பினும், இந்த இரண்டு மசோதாக்களும் திருத்தப்பட்ட அவை நடவடிக்கைப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
இந்த வார இறுதியில், அநேகமாக செவ்வாய்கிழமை மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்த முன்னேற்றங்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2024-2025-ம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நிதி ஒதுக்கீடு மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவது ஆகியவை திங்கள்கிழமை மக்களவையில் திருத்தப்பட்ட அவை நடவடிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ராஜ்யசபாவில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகள் குறித்த விவாதம் திங்கள்கிழமை தொடங்க உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
இரண்டு மசோதாக்களுக்கும் கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான செயல்முறையை இந்த மசோதாக்கள் வகுத்துள்ளன.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு லோக்சபாவின் முதல் அமர்வில், குடியரசுத் தலைவர் "நியமிக்கப்பட்ட தேதியை" அறிவிக்க வேண்டும், அந்தத் தேதிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த சட்டப் பேரவையின் பதவிக்காலமும் மக்களவையுடன் முடிவடையும் விதமாக குறைக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.