scorecardresearch

அந்தமான் வான்பகுதியில் உளவு பலூன்? அச்சுறுத்தலை எதிர்கொள்ள நெறிமுறைகள் உருவாக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வான்பகுதியில் கடந்தாண்டு பலூன் போன்ற வெள்ளை பொருள் கண்டதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

அந்தமான் வான்பகுதியில் உளவு பலூன்? அச்சுறுத்தலை எதிர்கொள்ள நெறிமுறைகள் உருவாக்கம்

இந்திய வான்பரப்பு பகுதியில் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்துவதைக் கண்டறிவது, உளவு பலூன் அல்லது வானத்தில் அடையாளம் தெரியாத பிற பொருள்கள் போன்ற புதிய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்திய இராணுவம் அடிப்படை நெறிமுறைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளது என்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மை காலத்தில் உளவு பலூன் குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தன. அமெரிக்க வான்பகுதியில் சீனாவின் உளவு பலூன் பறந்ததாக அமெரிக்க குற்றஞ்சாட்டி போர் விமானம் ம்அதை சுட்டுவீழ்த்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வான்பகுதியில் பலூன் போன்ற வெள்ளை பொருள் கண்டதாக அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.

பலூன் வகை வெள்ளைப் பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக தெரியாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அந்தப் பொருளின் படங்கள் பொதுமக்களால் தரையில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அது மியான்மரில் இருந்து வந்ததா அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை என்றும் 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு அது அங்கிருந்த நகர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வான்வழியில் மெதுவாக நகர்ந்து செல்லும் அடையாளம் காணமுடியாத பொருள் மற்றும் பிற பொருட்கள் குறித்து நெறிமுறைகள் விவரிக்கின்றன. ராணுவ அதிகாரிகள் கூறுகையில், மூன்று-சேவை நெறிமுறைகளின் தொகுப்பு மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, முக்கிய ராணுவ நிலைகளில் பல ரேடார்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிலையான இயக்க நடைமுறையின்படி, வான்வழி பொருளின் நேர்மறை அடையாளம் மற்றும் அது ஒரு சிவில் சொத்தாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கான சரிபார்ப்பு, அத்தகைய பறக்கும் பொருளைக் கண்டால் முதல் படிகளாக இருக்கும், விமானம் அல்லது ட்ரோன்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்படும் என்று அதிகாரி கூறினார்.

அந்த பொருள் என்னவென்நு கண்டறியப்பட்ட உறுதிசெய்யப்பட்ட உடன் அந்த இலக்கை அழிக்க முடிவு எடுக்கப்படும். ஏவுகணைகள் அல்லது தரை அடிப்படையிலான வான் பாதுகாப்பு அமைப்பு போன்ற ஆயுத அமைப்புகள், விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்படும். அந்த வான் பொருளின் உயரத்தின் அடிப்படையில் விமானம் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் கூறினார்.

விமானம் இலக்கிற்கு அருகில் உள்ள தளத்தில் இருந்த ஏவப்படும். விமானம் அல்லது ஏவுகணை ஏவுதல் முதல் இலக்கை அழிப்பது வரையிலான முழு நடவடிக்கையும் புகைப்படம் எடுக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் விரிவாக பதிவு செய்யப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் ஏவப்படும் நேரம், வான் பொருள் அளவு என அனைத்தும் பூமியில் உள்ள ரேடாரில் பதிவு செய்யப்படும். உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். சுட்டு வீழ்த்தப்பட்ட பொருளின் பாகங்கள் மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், வான்பரப்பில் பறக்கும் பொருளைக் அடையாளம் காண்பதில் தான் தான் சவால் உள்ளது என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Govt putting in place protocols to tackle threat of spy balloons after andamans incident

Best of Express