Advertisment

வெங்காய இறக்குமதி விதிகளை தளர்த்தியது மத்திய அரசு!

கடந்த செப்டம்பர் 14ம் தேதி அன்று மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

author-image
WebDesk
New Update
vegetable tamil koyambedu tamil

vegetable tamil koyambedu tamil

 Harikishan Sharma 

Advertisment

Govt relaxes import norms for onion amid rising prices :  வெங்காய விலையின் தொடர் விலைவாசி உயர்வு மற்றும் பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு வெங்காய இறக்குமதிக்கான விதிகளில் தளர்வுகளை வருகின்ற டிசம்பர் 15ம் தேதி வரை அற்வீத்துள்ளது. மேலும் வெங்காயத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உள்ள ஹை கமிஷனர்கள் மூலமாக வியாபாரிகளிடம் பேசுவது குறித்தும் இந்தியா முடிவு மேற்கொண்டுள்ளது. மண்டிகளில் கரிஃப் பருவ வெங்காயம் வந்த பிறகு விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது மத்திய அரசு.

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அறிவிப்பின் படி கடந்த 10 நாட்களாக வெங்காயத்தின் விலை ரூ. 11.56 வரை உயர்ந்துள்ளது. தற்போது வெங்காய விலை ரூ. 51.95 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த விலையை காட்டிலும் இது 12.13% கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 14ம் தேதி அன்று மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனவே உள்ளூர் நுகர்வோர்கள் சரியான விலையில் வெங்காயத்தை வாங்குவதை உறுதி செய்துள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வசதியாக, டிசம்பர் 15ம் தேதி வரை, அரசாங்கம், Plant Quarantine ஆணை, 2003 கீழ் fumigation and additional declaration on Phytosanitary சான்றிதழ்களுக்கான நிபந்தனைகளை தளர்த்தியுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய உயர் ஆணைய அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேசி, இந்தியாவிற்கான இறக்குமதி விரைவாக நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி வருகின்ற வெங்காயம் இந்திய துறைமுகத்தில் fumigation and endorsement இல்லாமல் இறக்குமதி செய்யப்படும். இறக்குமதியாளர் மூலம் இந்தியாவில் fumigation செய்யப்படும்.

விற்பனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாது என்பதை இறக்குமதியாளர்களிடம் உறுதிமொழியாக பெறப்படும். PQ ஆர்டர், 2003 இன் கீழ் இறக்குமதி நிபந்தனைகளுக்கு இணங்காததால், நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை நான்கு மடங்கு கூடுதல் ஆய்வுக் கட்டணத்திற்கு உட்படுத்த முடியாது. ”

வெங்காயத்தின் விலை மிதமான நிலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயர்ந்துள்ளாது. ஆனால் சமீபத்திய கனமழையானது, வெங்காயம் விளைவிக்கும் மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரீப் பயிர்களை, சேமித்து வைத்திருந்த வெங்காயங்களை மற்றும் விதை நர்சரிகளை கடுமையாக சேதப்படுத்திவிட்டது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வெங்காய விலை அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.  2020 ரபி பருவத்திலிருந்து வெங்காயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment