சுபஜித் ராய், தீப்திமான் திவாரி
எழுத்தாளர் ஆதிஷ் தசீரின் மறைந்த தந்தை சல்மான் தசீர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மறைத்ததாக குற்றம் சாட்டிய அரசு, அவருடைய வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமகன் அட்டையை ரத்து செய்துள்ளது. எழுத்தாளர் ஆதிஷ் தசீர் இந்த ஆண்டு மே மாதம் டைம் பத்திகையில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் பிரதமர் மோடியை பிரிவினையின் தலைவர் என்று கூறியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கூறுகையில், ஆதிஷ் தசீர் தனது இந்திய குடிமகன் (பிஐஓ) விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, “தனது மறைந்த தந்தையின் பாகிஸ்தான் பூர்வீகம் பற்றிய உண்மையை மறைத்துவிட்டார்” என்று கூறினார்.
“ஆதீஷ் தசீருக்கு தனது இந்திய குடிமகன் (பிஐஓ)/வெளிநாட்டில் இருக்கும் இந்திய குடிமகன் (ஓ.சி.ஐ) அட்டைகள் தொடர்பாக அவருடைய பதில் அல்லது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் பதில் அளிக்க தவறிவிட்டார்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். “அதனால், குடியுரிமைச் சட்டம் 1955 இன் படி, ஆதிஷ் அலி தசீர் ஒரு வெளிநாட்டில் இருக்கும் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருக்க தகுதியற்றவர். அவர் மிக அடிப்படைத் தேவைகள் மற்றும் மறைக்கப்பட்ட தகவல்களுக்கு தெளிவாக இணைக்கவில்லை” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமகன் அட்டை (ஓ.சி.ஐ) அட்டை விதிகளின் பிரிவு 7A ஐ அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது: இந்த துணைப்பிரிவின் கீழ் “பாக்கிஸ்தான், பங்களாதேஷ் அல்லது அது போன்ற பிற நாடுகளின் குடிமகனாக இல்லாதவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது தாத்தா, பாட்டி அல்லது பெரிய தாத்தா, பாட்டி குடிமகனாக இல்லாதிருந்தால் அவர்கள் ஓசிஐ அட்டைக்கு விண்ணப்பிக்க் தகுதியுள்ளவர்கள். இதனை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக கெசட்டில் அறிவிப்பதன் மூலம் குறிப்பிடலாம்.
செப்டம்பர் மாதத்தில் அரசு ஆதிஷ் தசீருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதற்கு பதிலளிக்க 21 நாட்கள் அவகாசம் அளித்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 20 ஆம் தேதி நோட்டீஸ் பெற்ற தசீர் 24 மணி நேரத்தில் ஒரு வழக்கறிஞர் மூலம் பதிலளித்தார்.
உள்துறை அமைச்சகத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பதிலை ஆதிஷ் தசீர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து டுவிட்டரில் கூறியுள்ளார்: “இது பொய்யானது. எனது பதிலுக்கு தூதரின் ஒப்புதல் இங்கே பதிவிடுகிறேன். எனக்கு முழு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்படவில்லை. மாறாக பதிலளிக்க 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. நான் அமைச்சகத்திடமிருந்து எதையும் கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தசீர் ஒரு இந்திய நாட்டவரின் குழந்தை என்ற உண்மையின் அடிப்படையில் அவருக்கு வெளிநாட்டில் இருக்கும் இந்திய குடிமனுக்கான (ஓசிஐ) அட்டை வழங்கப்பட்டது. அவருக்கு முதலில் 1999 -இல் இந்திய பூர்வீக குடிமகனுக்கான அட்டை வழங்கப்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டில் பிஐஓ மற்றும் ஓசிஐ அட்டைகள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஓசிஐ அட்டை வழங்கப்பட்டது.
அவரது தந்தை சல்மான் தசீர் ஒரு பாகிஸ்தான் நாட்டவராக இருந்தபோதிலும் அவரது தாயார் தவ்லீன் சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிகையாளரும் கட்டுரையாளரும் ஆவார். ஆதீஷ் தசீரை தனி தாயாகவும் ஒரே சட்டப்பூர்வ பாதுகாவலராகவும் வளர்த்தார். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவுமில்லை பிரியவும் இல்லை. சல்மான் தசீர் பாகிஸ்தானின் ஒரு முக்கிய அரசியல்வாதி. தனது நாட்டின் நிந்தனைச் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக படுகொலை செய்யப்பட்டார்.
ஆதிஷ் தசீர் அமெரிக்காவில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் மற்றும் கிரீன் கார்டை வைத்திருக்கிறார். அவர் இந்தியாவில் வளர்ந்தார், ஆனால் அவர் ஒருபோதும் இந்திய விசாவை முத்திரை குத்தவில்லை. தவ்லீன் சிங் அவரது தாயார். 1982 ஆம் ஆண்டில் தான் அவரது ஒரே பாதுகாவலர் என்று வாக்குமூலம் அளித்திருந்தார். அவர் தனது தந்தையை 2002-இல் 21 வயதாகும் வரை சந்தித்ததில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு 2005-06 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் தனது தந்தையிடமிருந்து விலகிவிட்டார். சல்மான் தசீர் பிரிக்கப்படாத இந்தியாவில் சிம்லாவில் பிறந்தார், அவரது தாயார் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்தார்.