படேல் சோமநாதர் ஆலயத்தை கட்டியது போல் அரசு அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் - ஆர்.எஸ்.எஸ்

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என யோகி ஆதித்யநாத் கருத்து...

அயோத்தியா விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா இன்று “சர்தார் வல்லபாய் படேல் எப்படி சோமநாதர் ஆலயத்தை கட்டி எழுப்பினாரோ அப்படி மத்திய அரசும் அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்டி எழுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார். நிலத்தை கைப்பற்றி அதை கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு தர வேண்டும் என்று மன்மோகன் வைத்யா கூறியிருக்கிறார்.   மேலும் படிக்க : அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்றம் விசாரணை

அயோத்தியா விவகாரம் – யோகி ஆதித்யநாத் கருத்து

உச்ச நீதிமன்றத்தின் அயோத்தியா வழக்கு விசாரணை நேற்று நடந்து முடிந்த பின்னர் உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் “தாமதமாக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு மிக ஆரம்பத்திலேயே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும் எனவும், பெரும்பான்மை மக்கள், மற்றும் அமைதியை விரும்புபவர்களுக்கு மிகவும் விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மோகன் பகவத் கருத்து

விஜயதசமி விழாவில் பேசிய மோகன் பகவத் “மத்திய அரசு, அயோத்யாவில் கோவில் கட்ட இருக்கும் தடைகளை சரிசெய்து தர வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறிர்யிருக்கிறார். சில அடிப்படைவாதிகளின் எதிர்ப்பை மனதில் வைத்துக் கொண்டு கோவில் கட்டுவதில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close