கே.எம்.ஜோசப் நியமனத்தை நிராகரித்த மத்திய அரசு: கொலீஜியத்தின் அடுத்த முடிவு என்ன?

இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது

நீதிபதி  கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் செய்த பரிந்துரையை  மத்திய அரசு நிராகரித்தது. அத்துடன், கொலீஜியம் செய்த பரிந்துரையை  மறுபரிசீலனை செய்யக் கோரியும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள இந்து மல்கோத்ரா ஆகிய இருவரது பெயர்களை, தலைமை நீதிபதி அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது.

அப்போது, வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதியாக இந்து மல்கோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசு அவரை நீதிபதியாகப் பொறுப்பேற்க அனுமதி அளித்துள்ளது.  அதே சமயம், கே.எம்.ஜோசப் பெயரை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய சட்டத்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது.

மூத்த நிதீபதியான கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீதித்துறைக்கும், மத்தியஅரசுக்கும் இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது.

கொலீயம் என்பது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதிகள் கொண்ட ஒரு அமைப்பாகும். நீதிபதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்புவதே இதன் வேலையாகும். இவர்கள் அனுப்பும் பட்டியலை . மத்திய அரசு அதைப் பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளித்து வருகிறது.

இதனை போல் தான்,  கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு,  உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக  2 பேரின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால்,  இந்த  பரிந்துரையில்  மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவின் பெயரை மட்டும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, நீதிபதி ஜோசப் பெயரை ஏற்க மறுத்து, அவரின் பெயரை மறுபரிசீலனை செய்யக் கோரி கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி உள்ள நிலையில், மத்திய அரசு இதுக் குறித்து கொலீஜியத்துக்கு விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில்,  நீதிபதி ஜோசப்புக்கு முன் சீனியாரிட்டி அடிப்படையில் 11 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஜோசப்பின் பெயருக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்பதால் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அதிகமான பெயரை பரிந்துரை செய்து அனுப்பினால், அதில் பலரை மத்திய அரசு நிராகரிக்கும் என்பதால், 2 பேரை பரிந்துரைந்தோம். அதிலும் ஒருவரை நிராகரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தான்,

இந்து மல்ஹோத்ரா நியமனத்தையும் நிறுத்திவைக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சார்பில் நேற்று (26.4.18) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.   நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு நிராகரித்தற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பலர் பல்வேறு காரணங்களை  தெரிவித்து வருகின்றனர்.

நேற்று, இந்திரா ஜெய்சிங் சார்பில் இதுக் குறித்து தொடரப்பட்ட அவசர வழக்கில்  நீதிபதிகள் குறிப்பிடும் படியான ஒரு கருத்தை தெரிவித்திருந்தனர். “மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள. அந்த கருத்தை பரிசீலிக்கலாம். அதே நியமனத்தை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தால், இப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில்,  மீண்டும் , கொலீஜியம்  அமைப்பில் உள்ள  நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் யாரின் பெயரை  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு வேளை மீண்டும், நீதிபதி ஜோசப் பெயரையே  மீண்டும் கொலீஜியம் பரிந்துரை செய்யதால், மத்திய அரசு அதை  ஏற்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது . இந்த சமயத்தில் அனைவரின் கவனமும்,   கொலீஜியம்  பக்கம் திரும்பியுள்ளது.

இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, 2014-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கொலிஜியம் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. ஆனால் அவரின் பெயரையும் மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

×Close
×Close