நினைவாற்றல் மூலம் 500 மருந்துகள் தயாரிக்கும் லஷ்மி குட்டிக்கு பத்மவிபூஷன் விருது

நினைவாற்றல் மூலம் 500 மருந்துகள் தயாரிக்கும் கேரளாவை சேர்ந்த லஷ்மி குட்டிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

By: Updated: January 26, 2018, 07:49:14 PM

தன் நினைவாற்றல் மூலம் மட்டுமே 500 மருந்துகள் தயாரிக்கும் கேரளாவை சேர்ந்த லஷ்மி குட்டிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள கள்ளாறு எனும் வனப்பகுதியை சேர்ந்தவர் லஷ்மி குட்டி.

லஷ்மிகுட்டி தன் நினைவாற்றல் மூலம் 500 மருந்துகள் தயாரிக்கிறார். அதன் மூலம், பல்வேறு நோய்கள், பாம்புக்கடி, பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வருகிறார்.

தன் தாயின் மூலம் இத்தகைய அறிவு லஷ்மி குட்டிக்கு வந்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில், இயற்கை மருந்துகள் குறித்து பாடம் நடத்துகிறார் லஷ்மி குட்டி.

1995-ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து ‘நாட்டு வைத்ய ரத்னா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Grandmother of the jungle and medical messiah meet the padma shri awardees from kerala

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X