Advertisment

கிரெட்டா டூல்கிட் விவகாரம் : மேலும் இரண்டு பேரை தேடுகிறது டெல்லி காவல்துறை

மும்பை காவல்துறைக்கு நாங்கள் தகவல்கள் அளித்தோம். அவருடைய இடத்தில் இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு ஐபோன் கைப்பற்றப்பட்டது.

author-image
WebDesk
New Update
Greta Thunberg toolkit case: Day after Disha Ravi’s arrest, police move against two Mumbai activists

Jignasa Sinha

Advertisment

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளார் திஷா ரவி கைது செய்யப்பட்ட அடுத்த நாளிலேயே டெல்லி காவல்துறை பிணையற்ற கைது வாரண்ட்டை மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் அவருடைய உதவியாளர் ஷாந்தனு ஆகியோருக்கு பிறப்பித்துள்ளது. திஷா ரவி, ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளார் கிரெட்டா தன்பெர்க்கிடம் பகிர்ந்து கொண்ட டூல்கிட்டை இவர்கள் தான் உருவாக்கினார்கள் என்று அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஜேக்கப் மற்றும் ஷாந்தனு இருவரும் முறையே அவர்களின் மும்பை மற்றும் பீட் வீடுகளில் இல்லை என்பதை காவல்துறை அறிவித்துள்ளது. இருவரும் இங்கிலாந்தை சேர்ந்த அரசுசாரா அமைப்பான Extinction Rebellion (XR)-ல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மேலும் இருவரை காவல்துறை தேடி வருவதாக கூறப்படுகிறது.

சிறப்பு செல்லில் பணியாற்றும் அதிகாரிகள், திசா மற்றும் க்ரெட்டாவிற்கு இடையே நடைபெற்ற உரையாடலை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று க்ரெட்டா பதிவு செய்த டூல் கிட்டை டெலிட் செய்யுமாறு திஷா கூறியுள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்க : காலநிலை மாற்றம் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது: எதிர்க்கட்சிகள் கண்டனம்

”அந்த டூல் கிட்டை ஷேர் செய்யாமல் இருக்க முடியுமா? தற்போது வேறெதுவும் நீ பேச வேண்டாம். நான் வழக்கறிஞரிடம் பேசுகின்றேன். மன்னித்துவிடு எங்களின் பெயர்களும் அதில் இருக்கிறது. நிச்சயமாக எங்கள் மீது உபா சட்டம் பாயும்” என்றூ திஷா அனுப்பியுள்ளார்.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், நிகிதாவும், ஷாந்தனுவும் தான் திஷாவை இதில் இணைய கூறியிருப்பார்கள் ஏன் என்றால் திஷாவிற்கு க்ரெட்டாவுடன் தொடர்பு உள்ளது. அவர்களின் நோக்கம் பிரச்சனையை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்வது தான். டூல்கிட் மிகவும் பாதுகாப்பாக பார்க்கப்பட வேண்டியது. ஆனால் க்ரெட்டா அதனை பதிவு செய்துள்ளார். திஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க கிரெட்டா அதனை டெலிட் செய்ய, திஷா மீண்டும் ஆவணங்களில் மாற்றங்கள் மேற்கொண்டு அப்லோட் செய்திருக்கிறார்.

இந்த வழக்கில் அமெரிக்க செயற்பாட்டாளார் பீட்டர் ஃப்ரைட்ரிச்சின் பங்கு என்ன என்பதையும் விசாரணை செய்து வருவதாக காவல்துறை கூறியுள்ளது. மனிஷி சந்திரா டிசிபி இது குறித்து கூறுகையில், இந்த டூல்கிட்டில் யாரையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று கூறி அதில் பிரபலமான பத்திரிக்கை நிறுவனங்கள், ஃபேக்ட்செக்கர்கள், என்.ஜி.ஓக்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. அதில் இருந்த ஒரு பெயர் தான் பீட்டர் ஃபிரைட்ரிச்.

சந்திராவைப் பொறுத்த வரையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 2006ம் ஆண்டு கண்காணிக்கப்பட்டு வருபவர் பீட்டர் என்றும் பஜன் சிங் பிந்தெர் எனப்படும் இக்பால் சவுத்திரியுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்தியன் எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக பீட்டரிடம் பேசிய போது, மொத்த உலகும் என்னைப் போன்ற வெள்ளை எழுத்தாளரில் துவங்கி, கறுப்பின பார்படியன் பாடகி ரிஹானா வரை அனைவரும் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக அடையாளம் காணப்பட்டிருப்பது நகைப்பிற்குரியது. இரண்டு புத்தகங்களை நான் பஜன் சிங்குடன் இணைந்து எழுதியுள்ளேன். தெற்காசிய நாடுகளில் இருந்து எனக்கு கிடைத்த பல நண்பர்களில் இவரும் ஒருவர். சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள் என அனைத்து தரப்பில் இருந்தும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். அனைத்து மனிதர்களுக்கும் சமத்துவம் மற்றும் விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் பிடிப்பு தான் எங்கள் இருவரின் நட்பிற்கும் மையப்புள்ளி. பஜன் காலிஸ்தானுக்கு ஆதரவாக  பேசி இருந்தால் நான் இந்நேரத்திற்கு வேறு திசை நோக்கி ஓடியிருப்பேன். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

டெல்லியில் நடைபெற்ற பத்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜேசிபி பிரேம்நாத், இந்தியாவின் பிம்பத்தை மொத்தமாக நாசம் ஆக்குவது தான் இந்த டூல்கிட்டை உருவாக்கியவர்களின் முக்கிய நோக்கம் என்றார்.

இந்த மின்னஞ்சல் சாந்தனுவின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் தான் அந்த கூகுள் டாக்குமெண்டிற்கு உரிமையாளர். நிகிதா மற்றும் திஷா அந்த டூல்கிட்டை எடிட் செய்திருக்கின்றனர். திஷா அந்த டாக்குமெண்ட்டை கெரெட்டாவிற்கு டெலகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். பின்பு அனைத்து எடிட்டர்களையும் இணைக்கும் வகையில் குழு ஒன்றை ஆரம்பித்து பின்னர் அதை டெலிட் செய்திருக்கிறார் திஷா என்று அவர் கூறினார். ஆனால் திஷா அதை நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார்.

காலிஸ்தானிற்கு ஆதரவான குழு ஒன்றின் நிகழ்வில் ஜனவரி 11ம் தேதி அன்று சாந்தனு மற்றும் ஜேக்கப் பங்கேற்றுள்ளனர். அது ஒரு இலக்கியம் சார்ந்த குழுவாகும். அதன் நிறுவனர்களில் ஒருவர் எம்.ஓ. தாலிவால் என்று காவல்துறை கூறியுள்ளது. அதிகாரிகளின் அறிவிப்பு படி, 60 முதல் 70 நபர்கள் இந்த மீட்டிங்கில் பங்கேற்றுள்ளனர். கனடாவை சேர்ந்த பெண் புனித் என்பவர் இந்த செயல்பாட்டாளர்களை இணைத்துள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 26ம் தேதி என்ன செய்ய வேண்டும் என்று பேசப்பட்டுள்ளது. அதன் பின்னர் டூல்கிட் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஜேக்கப் மற்றும் சாந்தனு முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அந்த டூல்கிட்டை உருவாக்கியவர்கள் குறித்த தகவல்களை கூகுளிடம் இருந்து பெற்றது சைபர் செல். பிறகு அதில் ஈடுபட்டிருந்த அனைவர் மீதும் பிணையில் வெளிவர இயலாத வாரண்ட் அறிவிக்கப்பட்டது. நிகிதாவின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். தொழில்நுட்ப குழு ஒன்று காவல்துறையினருடன் இணைந்து அவரின் லேப்டாப் மற்றும் போன் ஆகியவற்றை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த டாக்குமெண்ட்டை உருவாக்கியவர்கள் மொத்தம் 5 பேர் என்று கண்டறிந்துள்ளது காவல்துறை. நிகிதா, சாந்தனு, திஷா ஆகியோருடன் மேலும் இருவர் இதில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் ஐதராபாத்தை சேர்ந்தவர்.

பட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மனம் உடைந்த திஷா, நான் எந்தவிதமான சதி குழுவிலும் இடம் பெறவில்லை. நான் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தேன். ஏன் என்றால் அவர்கள் தான் நம் எதிர்காலம். அவர்கள் தான் நமக்கு தேவையான உணவை அளிக்கிறார்கள்” என்று கூறினார். மேலும் அந்த டூல்கிட்டை அவர் உருவாக்கவில்லை என்றும் இரண்டே இரண்டு மாற்றங்களை மற்றும் உருவாக்கியதாகவும் கூறினார்.

விவசாய போராட்டங்களில் பின்பு நடைபெற்ற வன்முறை அனைத்தும் அந்த டூல்கிட்டில் இருந்ததை பின்பற்றியதாகும் என்று கூறினார். பிப்ரவரி 4ம் தேதி அன்று காவல்துறை தேசதுரோகம், சதித்திட்டம் மற்றும் வெறுப்பினை தூண்டுதல் போன்ற பிரிவுகள்ளில் டூல்கிட்டை உருவாக்கிய நபர்கள் மீது வழக்கினை பதிவு செய்தனர். பிப்ரவரி 11ம் தேதி அன்று டெல்லி காவல்துறை ஜேக்கப்பின் வீட்டில் சோதனை நடத்தியது.

மும்பை காவல்துறைக்கு நாங்கள் தகவல்கள் அளித்தோம். அவருடைய இடத்தில் இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு ஐபோன் கைப்பற்றப்பட்டது. மாலையில் எங்களின் குழு வெளியேறும் போது அடுத்த நாள் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அடுத்த நாள் அவர் அவருடைய வீட்டில் இல்லை என்று ப்ரேம் நாத் கூறினார்.  காலிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான கருத்துகளை கொண்டிருக்கும் இணைய தளத்தை இணைக்கும் லிங்குகள் டூல்கிட்டில் இடம் பெற்றிருந்தன என்று காவல்துறை கூறியுள்ளது.

காவல்துறை அதிகாரி அனிஷ் ராய் (சிறப்பு செல்) டி.சி.பி கூற்றின் படி, அந்த டூல்கிட் நிறைய இணையதள லிங்குகளை கொண்டுள்ளது. அதில் ஒன்று askindiawhy.com. இது காலிஸ்தானுக்கு ஆதரவு தரும் நிறைய கருத்துகளை கொண்டுள்ளது. மேலும் அதில் விவசாயிகள் போராட்டத்தில் மேலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளது. இந்த டூல்கிட் ஒரு ப்ரைவேட் டாக்யூமெண்ட் ஆகும். அதனை மிகவும் சில நபர்களே பயன்படுத்த முடியும். இவர்கள் பொதுமக்களின் கருத்துகளை மாற்ற முயன்றவர்கள். உலக அளவில் புகழ்பெற்ற நபர்களை கொண்டிருப்பதால் காலிஸ்தானிற்கு ஆதரவான கருத்துகளை அவர்கள் உட்புகுத்த முயன்றனர் என்று கூறினார்.

திஷாவின் கைதை தொடர்ந்து எதிர்கட்சியின் கடும் விமர்சனத்திற்கு ஆளானது பாஜக. பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, டெல்லி காவல்துறை இந்தியாவை துண்டாட முயன்ற சக்திகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment