GST deadlock: Opposition states reject compensation plan : திங்கள் கிழமை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பான பிரச்சனைக்கு இம்முறையும் முடிவு எட்டப்பட்டவில்லை. பாஜக அல்லாத பிற கட்சிகளால் ஆளப்படும் 10 மாநிலங்கள், மத்திய அரசின் இரண்டு கடன் வாங்கும் முறைகளையும் நிராகரித்தன. ஆனால் 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைய இருக்கும் ஐந்தாண்டு காலத்திற்கு பிறகும் ஆடம்பர பொருட்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நீட்டிக்க கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
கூட்டத்தின் போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், இந்த நிதியாண்டில் ரூ .2.35 லட்சம் கோடி இழப்பீட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாநிலங்களுக்கு பதிலாக மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தின. வருவாய் பற்றாக்குறையையும் கொரோனா நோய் தொற்றையும் கணக்கில் கொண்டு ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. கேரளா, ஜார்கண்ட், மகாராஷ்ட்ரா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் 8 மணிநேர ஆலோசனைக்கு பிறகு வாக்குகள் மூலம் இதற்கு முடிவு காணலாம் என்ற அபிப்ராயத்தையும் தெரிவித்தனர் . தேர்வு 1ல் கடன் வாங்குவதற்கான வரம்பைகளையும் மாற்றியுள்ளது. ஆரம்பத்தில் 10% வருவாய் வளர்ச்ச்சி ஆதாரத்தின் அடிப்படையில் 97 ஆயிரம் கோடியை வாங்கலாம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது 7% வருவாய் வளர்ச்சி அனுமானத்தின் அடிப்படையில் 1 முதல் 1.10 லட்சம் கோடி வரை கடன் பெறும் வரம்பை மாற்றியுள்ளது.
To read this article in English
அக்டோபர் 12ம் தேதி வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே 20 மாநிலங்கள் முதல் ஆப்சனை தேர்வு செய்துள்ளனர். கவுன்சில் நியாயமாக செயல்படும் பொருட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக செஸ் நீட்டிக்கப்பட்டது. ஆனால் சில மாநிங்களுக்கு விருப்பம் 1 பிடிக்கவில்லை. விருப்பம் 3-ஐ சிலர் முன்வைத்தனர். அது தொடர்பாக அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதற்கு பதில் அளிக்குமாறு கவுன்சிலுக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
20 மாநிலங்கள் விருப்பம் 1-ஐ தேர்வு செய்துள்ளன. சில மாநிலங்கள் எதையும் தேர்வு செய்யவில்லை. அப்படி தேர்வு செய்யாதவர்களுக்கு மத்தியில், மத்திய அரசு தான் கடன் வாங்க வேண்டும் என்ற விவாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிறைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. 20 மாநிலங்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் எந்த முடிவும் எட்டப்பட முடியாது. நாங்கள் இது தொடர்பாக மேலும் பேச வேண்டியது உள்ளது. நான் எப்போதும் பேச தயாராகவே உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
“சட்டத்தின் உட்பிரிவுகளின்படி நடப்பு ஆண்டில் மாநிலங்களுக்கு முழு இழப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தான் கடன் வாங்க வேண்டும் என்றும் 10 மாநிலங்கள் உரிமை கோருகின்றன. முடிவு அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது”என்று கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், விருப்பம் 1 க்கு ஆதரவாக 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒருமித்த கருத்து உள்ளது. நாங்கள் பிரிவைத் தவிர்க்க விரும்புகிறோம், எனவே மற்றொரு வாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், வாக்களிப்பு நடக்கலாம். தங்கள் விருப்பங்களை வழங்கிய மாநிலங்கள் கஷ்டப்படக்கூடாது. ஆறு மாதங்கள் வரை ஆகிவிட்டது, நமக்கு பணம் தேவை என்றார் அவர்.
ஆகஸ்ட் 27ம் தேதி அன்று நடைபெற்ற முந்தைய கூட்டத்தில் மத்திய அரசு இரண்டு விருப்பங்களை வழங்கியது. ஒன்று ஜிஎஸ்டி அமலாக்கம் வாயிலாக, சிறப்பு சாளரம் வழியே ரூ. 97 ஆயிரம் கோடியை ஆர்.பி,ஐயிடம் இருந்து கடனாக பெறுதல். இல்லையென்றால் முழு பற்றாக்குறையான ரூ. 2.35 லட்சம் கோடி (கொரோனா வைரஸிற்காக 1.38 லட்சம் கோடி) பணத்தை சந்தைகளில் இருந்து பெறுதல்.
இந்த ஆண்டு இதுவரை கிடைத்த ரூ .20,000 கோடி செஸ் தொகை திங்கள்கிழமை மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று நிர்மலா கூறினார். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) அமல்படுத்திய முதல் ஆண்டிலிருந்து கிடைத்த நிதி ரூ .24,000 கோடியை அடுத்த வாரத்திற்குள் மாநிலங்களுக்கு வழங்க கவுன்சில் முடிவு செய்தது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளது, இது ஜூலை வரை ரூ .1.5 லட்சம் கோடி. இதில், மிகப் பெரிய தொகை நிலுவையில் உள்ள மாநிலங்கள்: மகாராஷ்டிரா (ரூ .22,485 கோடி), கர்நாடகா (ரூ. 13,763 கோடி), உத்தரபிரதேசம் (ரூ. 11,742 கோடி), குஜராத் (ரூ. 11,563 கோடி) மற்றும் தமிழ்நாடு (ரூ. 11,269 கோடி) .
ரூ. 5 கோடிக்கும் குறைவாய் ஆண்டு வருமானம் ஈட்டும் சிறிய அளவிலான வரிசெலுத்துவோர் வருகின்ற 2021ம் ஆண்டு ஜனவரி முதல் மாதாந்திர வரி செலுத்தலுடன் ஜி.எஸ்.டி வருமானத்தை காலாண்டு அடிப்படையில் மட்டுமே தாக்கல் செய்யலாம் என்று தளர்வு அளித்தது கவுன்சில்.
விலைப்பட்டியல் மற்றும் விற்பனை வருமானத்தில் உள்ள பொருட்களுக்கான எச்.எஸ்.என் (Harmonised System of Nomenclature) குறியீட்டை அறிவிப்பதற்கான திருத்தப்பட்ட தேவைக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இது ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. ரூ .5 கோடிக்கு மேல் வருவாய் கொண்ட வரி செலுத்துவோர் ஆறு இலக்க எச்.எஸ்.என்.ஐ மேற்கோள் காட்ட வேண்டும், அதே நேரத்தில் ரூ .5 கோடி வரை உள்ளவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் B2B சப்ளைக்கு நான்கு இலக்கங்கள் வரை மேற்கோள் காட்ட வேண்டும்.இஸ்ரோ, அன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் என்எஸ்ஐஎல் ஆகியவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி, குறிப்பாக ஸ்டார்ட்-அப்களால், உள்நாட்டு செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு விலக்கு அளிக்க கவுன்சில் முடிவு செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Gst deadlock opposition states reject compensation plan