Advertisment

ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு... கொண்டாடும் திரையுலகினர்... கொதித்தெழும் எதிர்க்கட்சிகள்.. வரவேற்கும் பாஜகவினர்...

அனுப்பம் கேர், ரன்வீர் சிங், ஆமீர் கான்,  தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் போன்றோர்கள் இந்த வரிக்குறைப்பினை வரவேற்றுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
GST annual returns submission date extended till November 30

GST Rate Cut : சரக்கு மற்றும் சேவை வரி - 2017ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான வரிகளாகும். வரி மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை முடிவு செய்ய ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்பட்டது. நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 31வது கூட்டம், டெல்லி விக்யான் பவனில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

Advertisment

அந்த கூட்டத்தில் 33 பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்படுகிறது. மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைத்து அறிவிப்புகள் வெளியாகின.

மேலும் படிக்க : 31வது ஜி.எஸ்.டி கவுன்சிலில் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி தொடர்பான முழுமையான தகவல்கள்

குறிப்பாக சினிமா டிக்கெட் மீதான வரியையும் குறைத்து அறிவிப்புகள் வெளியானதால் திரைப்படத் துறையினர் இந்த நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்கட்சியினர், நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தியும் வருகின்றார்கள்.

GST Rate Cut வரவேற்பும் சர்ச்சைகளும்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டுவந்ததிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.

கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசாக் ”லாட்டரி டிக்கெட்களின் வரியினை 12% 28% உயர்த்தி, கேரளாவில் வரி விதிப்பினை அதிகப்படுத்தலாம் என்று அருண் ஜெட்லி நினைத்தார். ஆனால் கேரளாவைத் தவிர வெளி மாநிலங்களுக்கு லாட்டரி டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால் லாட்டரி விற்கும் கும்பல்களுக்குத் தான் பெரிய நஷ்டம் என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மொத்தமாகவே 34 லக்சரி பொருட்கள் மட்டுமே இனி 28% வரியில் இருக்கும். மற்ற அனைத்து பொருட்களும் 18% மற்றும் அதற்குக் குறைவான வரிக்குள் அடங்கிவிடும். நிதி அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா “மோடியின் இரட்டை மனப்பாங்கினையும் போலித்தன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமைந்துள்ளதாக” கூறியுள்ளார்.

இந்தி நடிகர் அக்சய் குமார், சினிமா டிக்கெட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை குறைத்திருப்பதற்காக மோடிக்கு நன்றீ கூறியுள்ளார். மேலும் தங்களின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டதிற்கும் நன்றி கூறியுள்ளார்.

இந்தி திரைப்பட இயக்குநர் கரன் ஜோஹர் தன்னுடைய நன்றினையினை மோடிக்கு கூறி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்,

திரை உலகத்தினர் அனுப்பம் கேர், ரன்வீர் சிங், ஆமீர் கான்,  தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் போன்றோர்கள் இந்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ளனர்.

Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment