கொரோனா குணமடைந்தவருக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள்: மத்திய அரசு ஆலோசனை

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த  நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால சிக்கல்கள் குறித்து  மருத்துவர்கள் காவல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த  நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால சிக்கல்கள் குறித்து  மருத்துவர்கள் காவல் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா குணமடைந்தவருக்கு ஏற்படும்  நீண்டகால பாதிப்புகள்:  மத்திய அரசு ஆலோசனை

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த  நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து  மருத்துவர்கள் காவல் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஒரு ஆலோசனை செயல்முறையை மத்திய அரசு தொடங்கியது. நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இதுகுறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisment

திங்களன்று,எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில்," தீவிர நோய்த் தாக்குதலில் இருந்து குணமடைந்த கொரோனா நோயாளிகளின் நுரையீரல் தொடர்ந்து "மோசமான நிலையில்" இருப்பதாகவும்,  சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் நரம்பு மண்டலத்தின் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து நீடிப்பதாகவும்" தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நாட்டின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் குலேரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ குணமடைந்து வீடு திரும்பிய சில நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் நுரையீரல் மோசமான நிலையில் இருப்பதை சி.டி.ஸ்கேன் காட்டுகிறது. அத்தகைய நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது குறித்து   எய்ம்ஸ் குழு ஆய்வு செய்து வருவதாக" டாக்டர் குலேரியா கூறினார்.

“ நுரையீரலில் ஏற்பட்ட வடுக்கள் காரணமாக, சில நோயாளிகள் வறட்டு (உலர்ந்த) இருமலை அனுபவித்து வருவதாக  தெரிவிக்கின்றனர். சில நோயாளிகள் கடுமையான பலவீனத்தை உணருவதாகவும், மீண்டும் வேலைக்குச் செல்வதற்கான ஆற்றல் இல்லாதிருப்பதாகவும் தெரிவிக்கின்றன” என்று டாக்டர் குலேரியா கூறினார்.

Advertisment
Advertisements

இதற்கிடையே, நீண்ட அனுபவம் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் உதவியைப் பெரும் வகையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நாடு முழுவதும் உள்ள  ஐ.சி.யூ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டதாக   மத்திய அரசு தெரிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ், " கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்க தரமான சிகிச்சை முறைகளை ஆலோசனையாக வழங்கி மாநிலங்களை கைதூக்கி விடுவார்கள். இந்த தொலை-ஆலோசனை அமர்வுகள் சரியான சமயத்தில் தேவையான, நிபுணத்துவ வழிகாட்டுதலானது மாநிலங்களின் மருத்துவர்களுக்கு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்துக்கு இருமுறை வழங்கப்படும்" என்று சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Corona Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: