Advertisment

ஒரு மீனவர், விநாயகர் சிலை பலகை- கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன், 26 மணி நேரம் கழித்து உயிருடன் மீண்டது எப்படி?

யாரோ ஒருவர் கைகளை அசைப்பதைக் கண்டோம். நடுக்கடலில் படகு இல்லாமல் மரப் பலகையில் ஒரு சிறுவன் எப்படி இருக்கிறான் என்று குழம்பிப் போனோம்.

author-image
WebDesk
New Update
Lakhan Devipujak

Lakhan Devipujak was swept away after saving his brother

சூரத்தின் டுமாஸ் கடற்கரையில் இருந்து பத்து கடல் மைல் தொலைவில், ஒரு அதிசயம் நடந்தது.

Advertisment

26 மணி நேரத்திற்கு முன்பு தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவன், விநாயகர் சிலையைத் தாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மரப் பலகையில் ஒட்டிக்கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டான்.

அவது குடும்பத்தினரின் கூற்றுப்படி, சிறுவன் லக்கன் தேவிபூஜக் தனது தம்பி கரண் (12) தங்கை அஞ்சலி (8), மற்றும் அவர்களின் பாட்டி செவந்தபென் தேவிபூஜக் ஆகியோருடன் செப்டம்பர் 29 அன்று மதியம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான், அப்போது எதிர்பாராத விதமாக இரு சிறுவர்களும் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கரண் கடலில் தத்தளித்து கொண்டிருந்த போது, லகான் அவனைப் பிடித்து கரைக்கு அருகில் கொண்டு வந்தான். ஆனால் அதற்குள் லகான் மீண்டும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டான்.

பதறிப் போன பாட்டி உதவிக்காக கத்தி கூச்சலிட்டார். சுமார் மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இதையடுத்து தீயணைப்புத் துறை மற்றும் டுமாஸ் போலீசார் அலெர்ட் செய்யப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்டது, ஆனால் லக்கான் குறித்து எந்த அறிகுறியும் இல்லை, என்று அவரது மாமா விஜய் தேவிபுஜக் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை 3 மணியளவில், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள பாட் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரசிக் டாண்டேல் (48), தனது உதவியாளர்களுடன், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் கடலில் ஒரு படகில் இருந்தார்.

"எங்களால் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே நாங்கள் 12 கடல் மைல்கள் வரை பயணித்தோம். சற்றுத் தொலைவில் சந்தேகத்திற்கிடமான ஒன்றைக் கவனித்தேன். நாங்கள் அருகில் செல்ல முடிவு செய்தோம், யாரோ ஒருவர் கைகளை அசைப்பதைக் கண்டோம். நடுக்கடலில் படகு இல்லாமல் மரப் பலகையில் ஒரு சிறுவன் எப்படி இருக்கிறான் என்று குழம்பிப் போனோம்.

நாங்கள் சிறுவனிடம், கயிற்றை வீசி அவனை உள்ளே இழுத்தோம்.

அவனுக்கு தண்ணீர் மற்றும் தேநீர், ஒரு ஜோடி புதிய துணி, ஒரு போர்வை கொடுத்தோம். தனது சகோதரனைக் காப்பாற்றும் போது எப்படி அடித்துச் செல்லப்பட்டான் என்பதை அவன் எங்களிடம் கூறினான். அவன் தனது தந்தை மற்றும் மாமாவின் எண்களை தந்தான்.

நான் வயர்லெஸ் செட் மூலம், நவ்சாரியில் உள்ள தோலாய் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த படகோட்டிகளிடம் பேசினேன். கடற்கரை போலீசார் உஷார்படுத்தப்பட்டு, அவரது பெற்றோரின் எண்ணை கொடுத்தனர், என்றார்.

நவ்சாரி கடற்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எம்.ஆர்.சவ்தா கூறுகையில், “மீனவரிடம் இருந்து தகவல் கிடைத்ததும், போலீஸ் சூப்பிரண்டு சுஷில் அகர்வாலுக்கு தகவல் தெரிவித்தேன். தோலாய் துறைமுகத்தில், ICU ஆம்புலன்ஸ் மற்றும் டாக்டர்கள் குழுவை ஏற்பாடு செய்தோம்.

சிறுவனின் குடும்ப உறுப்பினர்களையும் அங்கு வரும்படி கூறினோம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில், ராசிக் டாண்டலின் படகு துறைமுகத்தை அடைந்தது. அங்கு லக்கானை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

லக்கான் தனது பெற்றோரைச் சந்தித்த பிறகு, நீராலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான், அங்கு ஒரு நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டான்.

திங்களன்று, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் தேவிபூஜக் சமூகம் சூழ சிறுவன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான், அவன் திரும்பியதைக் கொண்டாட அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இதற்கிடையில், சிறுவனின் உயிரைக் காப்பாற்றியதற்காக மீனவர் ரசிக் தண்டேலுக்கு நவ்சாரி பாஜக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுவனின் மாமா விஜய் கூறியதாவது: செப்டம்பர் 28-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடந்து பெரிய சிலைகள் டூமாஸ் கடலில் கரைக்கப்பட்டது. சிலை நிறுவ பயன்படுத்தப்பட்ட ஒரு மரப்பலகை இரவில் லக்கானுக்கு அருகில் சென்றது, அவன் அதன் மேல் ஏறிக்கொண்டான். கணபதி தான் என் மருமகனின் உயிரைக் காப்பாற்றினார், என்றார்.

மீனவர் அவனைக் கவனிப்பதற்கு முன்பு, லகான் தன்னைக் கடந்து சென்ற கப்பலின் கவனத்தை ஈர்க்க முயன்றான், ஆனால் அது பலனளிக்கவில்லை.

சிறுவனின் தந்தை, விகாஷ் தேவிபூஜக், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ‘அவனை உயிருடன் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். இறுதிச் சடங்குகள் செய்ய அவது உடலைத் தேடினோம். அவனை உயிருடன் பார்த்ததும் எங்களுக்கு பேச்சு வரவில்லை, எங்களால் செய்ய முடிந்ததெல்லாம் அழுதுதான். ராசிக் மற்றும் மற்றவர்களைச் சந்தித்து அவது உயிரைக் காப்பாற்றியதற்காக, நன்றி தெரிவித்தோம், என்றார்.

Read in English: A fisherman, Ganesh idol plank and a boy found alive at sea 26 hours later

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment