Advertisment

அகமதாபாத் ஏர்போர்ட்டில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது; குஜராத் போலீஸ் நடவடிக்கை

அகமதாபாத் ஏர்போர்ட்டில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்த குஜராத் போலீஸ்; 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் கண்டுபிடிப்பு

author-image
WebDesk
New Update
isis teroorists

அகமதாபாத் ஏர்போர்ட்டில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்த குஜராத் போலீஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாகிஸ்தானில் வசிக்கும் முக்கிய தலைவர் ஒருவரின் உத்தரவின் பேரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாட்டாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கைப் பிரஜைகளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) திங்கள்கிழமை கைது செய்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Gujarat ATS arrests 4 ‘ISIS terrorists’ from Ahmedabad airport

மே 19 ஆம் தேதி இரவு 8 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏ.டி.எஸ் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஷ் உபாத்யாய்க்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில் நால்வரும் கைது செய்யப்பட்டனர். காந்திநகரில் உள்ள நானா சிலோடாவில் வீசப்பட்ட ஆயுதங்களை நான்கு பேரும் எடுக்கவிருந்ததாகக் கூறியதாகவும், அடுத்த நடவடிக்கை குறித்து அவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணைக்குப் பின் குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் விகாஸ் சஹாய் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

மே 21 மற்றும் மே 22 ஆகிய தேதிகளில் முறையே மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இன் தகுதி மற்றும் எலிமினேட்டர் சுற்றுகள் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நால்வர் முகமது நுஸ்ரத் (33), முகமது பாரிஸ் (35), முகமது நஃப்ரான் (27), முகமது ரஸ்தீன் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களான இவர்கள் இலங்கையிலிருந்து அகமதாபாத் நோக்கிச் செல்கிறார்கள் என்று ஏ.டி.எஸ்-க்கு முதன்முதலில் மே 18 அன்று தகவல் கிடைத்ததாக விகாஸ் சஹாய் கூறினார்.

இந்த நால்வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு) சித்தாந்தத்தில் "முற்றிலும் தீவிரமயமாக்கப்பட்டவர்கள்" என்று கூறிய விகாஸ் சஹாய், நால்வரும் மே 19 காலை கொழும்பில் இருந்து சென்னை வந்தடைந்ததைத் தொடர்ந்து நான்கு பேரும் சென்னையில் இருந்து அகமதாபாத் விமானத்தில் புறப்பட்டனர். நான்கு பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் UAPA, IPC மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏ.டி.எஸ்ஸின் செய்திக்குறிப்பில், “இஸ்லாமிய அரசில் (IS), அபுபக்கர் பாக்தாதி காட்டிய வழியைப் பின்பற்றுவதற்கும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அட்டூழியங்களில் ஈடுபடும் தாக்குதல்காரர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கும், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் (BJP-RSS) உறுப்பினர்களுக்கு பாடம் புகட்டுவதற்கும் அவர்கள் அர்ப்பணிப்பைக் காட்டும் சான்றுகள் இருந்தன,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, 2019 ஏப்ரலில் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) என்ற இலங்கை தீவிர தீவிரவாத அமைப்பில் அவர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

ஏ.டி.எஸ் அறிக்கையின்படி, அவர்களின் முக்கிய தலைவர் அவர்களுக்கு இலங்கை நாணயத்தில் ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்த அம்சத்தைப் பற்றி விரிவாகக் கூறாத நிலையில், விசாரணையில் நால்வரும் முதலில் பாகிஸ்தானில் வசிக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டதாகவும், இல்லையெனில் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரும் அவர்களைக் கையாள்பவராக சந்தேகிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த ‘அபு’ என்பவரும் தொடர்பு கொண்டதாகவும் விகாஸ் சஹாய் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் புரோட்டான்மெயில் மூலம் அபுவுடன் தொடர்ந்து கடிதப் பரிமாற்றம் செய்து வந்தனர்.

“ஏ.டி.எஸ் நான்கு கடவுச்சீட்டுகள், 2 மொபைல் போன்கள் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையின் கரன்சிகளை கைப்பற்றியுள்ளது மற்றும் அவர்களின் பொருட்களில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் முழுமையான தீவிரமயமாக்கலுக்குப் பிறகு, அபு அவர்களை இந்தியாவில் தாக்குதல்களை நடத்த ஊக்குவித்தார், அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். அபு அவர்களுக்கு இலங்கைப் பணத்தில் நான்கு லட்சமும் கொடுத்தார்” என்று விகாஸ் சஹாய் கூறினார்.

கைப்பற்றப்பட்ட இரண்டு மொபைல் போன்களும் வெவ்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிப்படுத்தியுள்ளன, அவை ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2-3 பேர் போதைப்பொருள் வழக்குகளிலும் கடந்தகால கிரிமினல் வழக்குகளைக் கொண்டுள்ளனர் என்று விகாஸ் சஹாய் கூறினார்.

விகாஸ் சஹாய் கூறுகையில், “மேலும் விசாரணையில், அந்த தொலைபேசிகளில் காந்திநகரில் உள்ள நானா சிலோடாவின் சில புகைப்படங்கள் மற்றும் இருப்பிடங்கள் இருப்பது தெரியவந்தது, மேலும் அவர்களின் பாகிஸ்தான் கையாளுபவர் அங்கு ஆயுதங்களை வைத்திருக்கப் போகிறார், மேலும் ஆயுதங்கள் வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன் இருப்பிடம் பகிரப்பட்டது. இரவோடு இரவாக ஏ.டி.எஸ் அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பிஸ்டல் பெட்டியில் நட்சத்திர அடையாளத்துடன் மூன்று கைத்துப்பாக்கிகள், அவற்றின் எண் மற்றும் அழிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் 3 கைத்துப்பாக்கிகளிலும் FATA (பாகிஸ்தானில் உள்ள கூட்டாட்சி நிர்வாக பழங்குடிப் பகுதிகள்) என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாது என்று கூறிய குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மொழிபெயர்ப்பாளர் ஒருவரால் விசாரிக்கப்பட்டபோது அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தினர். ஏ.டி.எஸ் அவர்களின் புரோட்டான் டிரைவில் ஐந்து புகைப்படங்களைக் கண்டறிந்தது, அதில் ஒன்று குறிப்பிட்ட இடத்திடன் அமைவிடத்தை குறிப்பது, மேலும் "இளஞ்சிவப்பு பையில்" ஒரு பார்சல், "அரபு எழுத்துடன்" ஒரு கொடி மற்றும் மூன்று  "பிஸ்டல் வடிவ பார்சல்கள்" ஆகியவை அடங்கும்.”

ஏ.டி.எஸ் மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் மூன்று துப்பாக்கிகளையும் கைப்பற்றியது.

ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பயங்கரவாத செயல்களைச் செய்யும் இடத்தில் கொடியை நடுமாறு கூறியதாகக் கூறினார்.

இந்த தோட்டாக்களை யார் கொடுத்தது என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ யாரிடமாவது ஆதரவு உள்ளது என்றும் விகாஸ் சஹாய் கூறினார்.

குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Gujarat Isis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment