குஜராத் அமைச்சரவை மாற்றி அமைப்பு: ரவீந்திர ஜடேஜாவின் மனைவி உட்பட 19 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரத் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரத் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
Gujarat-Cabinet-Reshuffle.

குஜராத் அமைச்சரவை மாற்றி அமைப்பு: ரவீந்திர ஜடேஜாவின் மனைவி உட்பட 19 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

குஜராத்தில் ஒரு நாள் நீடித்த பெரும் பரபரப்புக்குப் பிறகு, முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. மொத்தம் 21 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜாவும் ஒருவர். ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரத் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை விரிவாக்க விழாவில், பா.ஜ.க. தேசியத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

புதுமுகங்களுக்கு வாய்ப்பு: அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா (Jamnagar North சட்டமன்றத் தொகுதி), இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். 

தற்போதைய பலம்: 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், அதிகபட்சமாக 27 பேர் வரை (மொத்த எம்.எல்.ஏ.க்களில் 15%) அமைச்சர்களாகப் பதவி வகிக்கலாம். புதிய விரிவாக்கத்தின் மூலம் தற்போது 21 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

கூண்டோடு பதவி விலகல் பின்னணி

அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, முந்தைய அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்கள் மொத்தமாகக் கூண்டோடு நேற்று (வியாழக்கிழமை) பதவி விலகினர். சமீபத்தில் குஜராத் மாநில பா.ஜ.க.வில் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இம்மாத தொடக்கத்தில் குஜராத் பா.ஜ.க தலைவராக இருந்த மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக மத்திய இணை அமைச்சர் ஜகதீஷ் விஸ்வகர்மா பதவியேற்றார். கடந்த 2022-ம் ஆண்டு டிச.12-ம் தேதி பூபேந்திர படேல் 2-வது முறையாகக் குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகு, இந்த அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

பதவியேற்ற 21 அமைச்சர்கள் விவரம்

மொத்தம் 21 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களில் இருவர் பூபேந்திர படேலின் முந்தைய அமைச்சரவையிலும் இடம் பெற்றவர்கள். மீண்டும் அமைச்சர்களானவர்கள்: 1. ஹர்ஷ் சங்வி (Majur சட்டமன்றத் தொகுதி), 2. பிரஃபுல் பன்ஷேரியா (Kamrej சட்டமன்றத் தொகுதி)

புதிய அமைச்சர்கள்:

3. ஜிதேந்திர வாகானி (Bhavnagar West)

4. நரேஷ் படேல் (Gandevi)

5. அர்ஜுன் மோத்வாடியா (Porbandar)

6. ப்ரத்யுமன் வாஜா (Kodinar)

7. ரமன் சோலங்கி (Borsad)

8. ஈஸ்வர்சிங் படேல் (Ankleshwar)

9. மனிஷா வாகில் (Vadodara City)

10. காந்திலால் அம்ருதியா (Morbi)

11. ரமேஷ் கடாரா (Fatepura)

12. தர்ஷனா வாகேலா (Asarwa)

13. கௌஷிக் வேக்காரியா (Amreli)

14. பிரவீன் குமார் மாலி (Deesa)

15. ஜெயராம் காமித் (Nizar)

16. திரிகம் சங்கா (Anjar)

17. கமலேஷ் படேல் (Petlad)

18. சஞ்சய்சிங் மஹிடா (Mahudha)

19. பூனம்சந்த் சனாபாய் பராண்டா (Bhiloda)

20. ஸ்வரூப் தாக்கூர் (Vav)

21. ரிவாபா ஜடேஜா (Jamnagar North)

Bjp Gujarat

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: